Dec 6, 2012

வரும் 21ம் திகதி உலகம் அழியாது - வதந்தியை நம்பாதீர்கள் என்கிறது அமெரிக்கா!

வரும் 21ம் திகதி உலகம் அழியாது - வதந்தியை நம்பாதீர்கள் என்கிறது அமெரிக்கா!
[
News Service வரும் 21ம் திகதியுடன் மாயன் நாட்காட்டி முடிவதால், உலகம் அழியப் போகிறது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  
அமைதியாய் இருங்கள்- உலகில் எந்த மாற்றமுமே டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறப்போவதில்லை. மாயன் நாட்காட்டியில் கூட ஒரு ஆண்டுக்கான சுற்று டிசம்பர் 21ம் திகதி முடிந்து புதிய ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தொடங்குகிறதே தவிர அந்த நாட்காட்டியின் ஊழிக்காலம் முடியவில்லை என அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான வதந்திகள் கடந்த காலங்களிலும் பல்வேறு விதமாக வந்திருக்கின்றன. உலகம் அழியப்போகிறது என்ற வதந்தி 2003 , 2004ம் ஆண்டுகளில் கூட பரவின. எந்த ஒரு அழிவோ மாற்றமோ டிசம்பர் 21ம் திகதி இடம்பெறப்போவதில்லை. அது மற்றைய நாட்களைப் போல சாதாரண நாட்களே. கிரகங்கள் பூமியை நோக்கி வருகின்றன. எரிகற்கள் விழப்போகின்றன என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...