Dec 6, 2012

சுவீடனில் கடும் பனிப்புயல் - நோபல் பெற்றவர்கள் அங்கு செல்ல முடியாமல் அவதி!



News Service கடும் பனிப்புயல் காரணமாக சுவீடனில் பல பகுதிகள் ஸ்தம்பித்துள்ளன. பஸ், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோபல் பரிசு பெற வந்தவர்கள் அவதிப்பட்டனர். சுவீடனில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று பனிப்புயல் வீசியதால் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
  
இதனால் தலைநகர் ஸ்டாக்ஹோம் உள்பட பல நகரங்கள் பனியில் மூடின. முக்கிய விமான நிலையம் ஸ்தம்பித்தது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஸ்டாக்ஹோம் விமான நிலையத்துக்கு நேற்று வருவதாக இருந்தது. ஆனால், பனி காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எந்த விமானமும் வரவில்லை.
இதுகுறித்து நோபல் பரிசு வழங்கும் நிர்வாகிகள் கூறுகையில், நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புதன்கிழமை வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப இங்கு பல்வேறு கருத்தரங்கு, மாநாட்டு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஆனால், பனிப்பொழிவு காரணமாக தாமதமாகிறது என்றனர்.
பரிசளிப்பு விழா திங்கட்கிழமை நடக்கிறது. அதற்குள் நிலைமை சரியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாலைகளில் பனி மூடிக்கிடப்பதால் மக்கள் வெளியில் வரமுடியவில்லை. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி உள்ளது. மேலும் 20 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான பனிப்பொழிவால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...