Dec 23, 2012


ஹெல்மெட் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை..


1.உங்கள் தலையினை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை மட்டும் வாங்குங்கள்.

2. கண்டிப்பாக ஹெல்மெட் (Helmet ) சரியாக பொருந்தியிருக்க (அதாவது உங்கள் தலை மற்றும் தாடையில் சரியாக பொருந்த வேண்டும்) வேண்டும்.
எக்காரணம் கொண்டும் சரியாக பொருந்தாத மற்றும் சிறப்பான வசதிகள் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக்கூடாது.

3. உங்கள் காது, கன்னங்கள் மற்றும் கழுத்தின் பின்புறம் போன்றவற்றில் எவ்விதமான உறுத்தல்களும் இல்லாமல் உங்களுக்கு இதமான சூழ்நிலை தந்தால்தான். உங்கள் பயணத்தின் பொழுது எவ்விதமான சிரமங்கள் இல்லாமல் இயல்பாக இருக்கும்.

4. எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராப் இல்லாத தலைக்கவசத்தினை பயன்படுத்தக் கூடாது.

5. உங்கள் ஸ்ட்ராப்யில் ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருந்தால் போதுமானது.

6. உங்கள் ஸ்ட்ராப் உங்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சட்டென்று ஏற்படும் நிகழ்வுகளின் பொழுது உங்கள் தலைக்கவசம் தலையை விட்டு வெளியேறாது.

7. முன்புற கண்ணாடியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பல உள்ளன அவற்றில் பூச்சுசெய்யப்பட்ட கண் ணாடிகள் அழகை கூட்டினாலும் அவை இரவு மற்றும் வெளிச்சம் குறைந்தவேளைகளில் சிறப்பான
காட்சியினை காட்டுவதில் தடுமாறும்.

8. முன்புற கண்ணாடியில் கீறல்கள் மற்றும் அழுக்குகள் சேராமல் கவனித்துக்கொள்ளுங்கள். அதிகப்படியான கீறல்கள் மற்றும் உடைந்தாலும் கண்ணாடியினை மாற்றுங்கள்.

9. உங்கள் தலைக்கவசம் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கூடியதாக இருத்தல் அவசியம்.
மேலும் மிக கடிணமான மேற்புற ஓடு அமைந்திருத்தல் அவசியம்.

10.தர முத்திரை அவசியம் இந்தியாவின் ஐஎஸ்ஐ(ISI) அல்லது DOT(U.S. Department of Transportation) முத்திரை இருக்க வேண்டும்.

தோற்றம் மற்றும் வடிவம் உங்கள் விருப்பமான மற்றும் அழகான வடிவத்தினை தேர்ந்தேடுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...