Dec 23, 2012

ஆசியாக் கண்டத்துக்கும் தெற்கே, ஜோர்டான்நாட்டுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது
டெட் ஸீ...[DEAD SEA]


இதன் பரப்பளவு 400 மைல்கள். இது மத்தியதரைக் கடலுக்கும் தாழ்வாக 1300 அடியில் அமைந்துள்ளதால், உலகத்திலேயே தாழ்வாய் அமைந்த கடல் இதுதான்.....

இந்தக் கடலில் விழுந்தவர்கள் சாக மாட்டார்கள்...

நீச்சல் தெரியாவிட்டால் கூட, மிதந்து கொண்டே கரைக்கு வந்துவிடலாம் ......

பொதுவாக கடல் நீரில் உள்ள உப்பு 5 சதவீதமாகும். ஆனால் இந்தக் கடலில் உப்பின் அளவு 25 சத வீதம்.
அதனால் ஜோர்டான் நாட்டிலிருந்து வந்து கலக்கும் நதியில் உள்ள மீன்

மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமே இந்தக் கடலை அடைந்ததும் இறந்துவிடுவதால் இதற்கு மரணக் கடல் {DEAD SEA} என்று பெயர் வந்தது....

ஆனால் மனிதர்கள் இறக்க மாட்டார்கள். ... இதன் நீரில் சோடியம் குளோரைடு, உப்பைத் தவிர, பொட்டாஷ், மக்னீஷியம், புரோமைடு, கால்சியம் போன்ற உப்புகள் 20 லட்சம் டன் வரை உள்ளது.

இங்கே வரும் உல்லாசப் பயணிகளுக்கு, இந்த உப்புக் கலந்த நீரில் குளிப்பதென்றால் ஒரே மகிழ்ச்சி.

ஏனெனில் இந்தக் கடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான உப்பு, ஒரு போர்வையாக மூடியிருப்பதால் இதில் யாரும் மூழ்க முடியாது.
மாறாக மிதப்பார்கள்.

மேலும் திமிங்கிலம், சுறா போன்ற ஆபத்தான மீன்கள் இதில் உயிர் வாழ முடியாததால், அவற்றாலும் ஆபத்து கிடையாது.

நூற்றுக் கணக்கான பேர்கள் ஒரே நேரத்தில் கடலின் மேல் மிதந்து கொண்டிருக்கும் காட்சியைப் பார்ப்பதற்காகவே, இந்தக் கடலுக்கு உல்லாசப் பயணிகள் கூட்டம் வருகிறதாம்...

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...