Sep 1, 2012

சுனாமி எச்சரிக்கையால் பீதி பிலிப்பைன்சில் பயங்கர பூகம்பம்




மணிலா : பிலிப்பைன்சில் நேற்று மாலை இந்திய நேரப்படி 6.20 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் சமர் தீவின் கிழக்கே கடல்பகுதியில் 106 கி.மீ. தூரத்தில் 34.9 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவையில் நிலநடுக்கத்தின் அளவு 7.6 ஆக பதிவானது. பூகம்பத்தால் பிலிப்பைன்சில் பெரும்பாலான நகரங்கள் குலுங்கின. தெற்கு பகுதியில் உள்ள ககயான் டே ஒரோவில் சில வீடுகள் இடிந்தன. மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் நாசமானது.

ஆழ்கடலில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாலும், கடல் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும், உடனடியாக பிலிப்பைன்ஸ், ஜப்பான் மட்டுமில்லாமல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பிலிப்பைன்சின் கடற்கரையோரம் வசித்த மக்கள் அனைவரும் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் அவசர, அவசரமாக தங்கள் குழந்தைகளுடன் மலைப்பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். பல இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்ப பெறப்பட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...