Sep 1, 2012

மர்ம வைரஸ் தாக்குதல் கலிபோர்னிய பூங்காவுக்கு வந்த 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு?




லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியா யோசிமைட் தேசிய பூங்காவுக்கு வந்த 10 ஆயிரம் பேர் மர்ம வைரஸ் கிருமி தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்கும் அபாயம் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த மர்ம வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு ‘ஹென்டாவைரஸ் பல்முனரி சின்ட்ரோம்’ என்ற நோய் வருகிறது. இதுவரை நோய் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட 6 பேரில் இருவர் இறந்து விட்டனர். யோசிமைட் பள்ளத்தாக்கில் உள்ள இந்த பூங்கா புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும். ஆண்டுதோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, இங்குள்ள காட்டேஜ்களில் தங்குகின்றனர். இங்கு தங்கி இருந்தவர்களிடம் இந்த வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த 2900 பேருக்கு நோய் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, குடல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். இதற்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நோயை விரைவாக கண்டுபிடித்தால் நோயாளி காப்பாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...