Nov 28, 2012

இங்கிலாந்தில் கொட்டும் மழை - வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்! [Monday, 2012-11-26




News Service இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த பலத்த மழையில் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த புதன்கிழமையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன.
  
மழை வெள்ளத்தில் மரம் விழுந்தும், காரில் சிக்கியும் 2 பேர் பலியாகி உள்ளனர். மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள்
கூறினர். மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பிரதமர் டேவிட் கேமரூன், மழை பாதிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...