Nov 28, 2012

செவ்வாய் கிரகத்தில் 80 ஆயிரம் பேரைக் குடியேற்றத் திட்டம்! [Wednesday, 2012-11-28




News Service செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
  
இந்நிலையில், செவ்வாய் கிரகத்துக்கு ஆள்களை ஏற்றிச் செல்லும் திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.இது தொடர்பாக லண்டனில் உள்ள ராயல் ஏரோநாட்டிக்கல் சங்கத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறியதாவது:-
முதல்கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். பின்னர், படிப்படியாக அதிக அளவிலானோர் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயித்துள்ளோம். முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக் கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதோடு, விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9' விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். செவ்வாய் கிரகத்தில் முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர், சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார் எலான் மஸ்க்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...