Nov 28, 2012

உலகிலேயே செக்சியான மனிதர் வடகொரிய அதிபராம்! - சீன நாளிதழ் குசும்பு


[Wednesday, 2012-11-28
News Service உருண்டை முகத்துடன் இருக்கும் வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜாங்தான் உலகிலேயே செக்சியான மனிதர் என்று சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டிருக்கிறது.
  
சும்மா காத்து வாக்கில் வரும் செய்திகள், அரசல் புரசல் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படும் தகவல்களுக்கு கண், காது, மூக்கு வைத்து சுவாரஸ்யமாக கூறும் செய்திகளை ஆனியன் என்கிறார்கள். உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பதால் இந்த பெயர். அமெரிக்காவில் தி ஆனியன் என்ற பெயரில் நாளிதழும் இணையதளமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரிய தலைவர் கிம்ஜாங்யுன்ஐ தி ஆனியன் மீடியா நிறுவனம் இந்த ஆண்டின் செக்சியான மனிதர் என்று அறிவித்திருப்பதாக சீனாவின் தி பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ் குசும்பு செய்தி வெளியிட்டுள்ளது. இளமையானவர், அழகானவர், உருண்டை முகம்
கொண்டவர், துடிப்பானவர், உறுதியானவர்.. என எல்லா பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக கிம்ஜாங் விளங்குகிறார் என்று கமென்ட்டும் அடித்திருக்கிறது. தனது இணையதளத்தில் 55 பக்கங்களுக்கு கிம்ஜாங்கின் விதவிதமான படங்களையும் வெளியிட்டிருக்கிறது.
நிஜமாகவே, கிம்ஜாங்குக்கு இப்படியொரு பட்டத்தை தி ஆனியன் மீடியா நிறுவனம் வழங்கியதா என்பது பற்றி தகவல் இல்லை. இதுபற்றி பீப்பிள்ஸ் டெய்லி செய்தியாளர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு நடத்தும் பத்திரிகையில் குசும்பு செய்தி வருவது இது முதல்முறை அல்ல. அமெரிக்க பார்லிமென்டை வாஷிங்டனில் இருந்து இடம் மாற்றப் போகிறார்கள். வேறு இடம் பார்த்து வருகிறார்கள் என்று சீன அரசு நடத்தும் பீஜிங் ஈவ்னிங் நியூஸ் இதழில் 2002ம் ஆண்டு பரபரப்பான பொய் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...