Dec 8, 2012


ஜப்பானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பான் கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5.18 மணியளவில் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹோன்சு அருகே சென்டாயை மையமாகக் கொண்டு உருவானது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அலுவகலத்தில் பணியிலிருந்தவர்களும் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தெருவில் இறங்கி ஓடினர். கடுமையான நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மியாகி அருகே 1 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பும் என்று அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால அப்பகுதியிலுள்ளோர் அச்சத்துடன் உள்ளனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தால், 2011 ஆம் ஆண்டு உருவானதுபோன்ற பேரலைகள் ஏற்படவாய்ப்பில்லை என கருதப்படுகிறது. செண்டாய் பகுதியில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் இது 9 ஆவது நிலநடுக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்டேட்:
நேற்று மாலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் இன்று காலை சுனாமி அடித்தது. எனினும், சுனாமி அலைகளின் உயரம் பாதிப்பில்லாத அளவுக்கு 1 மீட்டர் உயரத்துக்குள் இருந்ததால் சுனாமி அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது.



No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...