Dec 8, 2012

கூந்தலை பாதுகாக்கும் இயற்கை ஷாம்பூ



hair care_21அண்மைக்காலத்தில் வேதிப்பொருளால் உருவான ஷாம்பூகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது ஆயுர்வேத ஷாம்பூகள் அதிகமாக வருகின்றன. சோறு வடித்தெடுத்த பின் கிடைக்கும் கஞ்சி நீர் ஒரு நல்ல ஷாம்பூவாகும். அதைச் சீயக்காய்ப் பொடி அல்லது கடலைமாவுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
குழந்தையின் தலையில் தேய்க்க, கஞ்சியும் கடலைமாவும் சிறந்தது. தலைக்கோ உடம்பிற்கோ எரிச்சல் தராது. தாளி இலையை அரைத்தால் முட்டைக்கரு போன்று வழவழா என்று வரும். இதுவும் ஒரு நல்ல ஷாம்பூ. இதனைச் சீயக்காய்ப் பொடியுடன் கலந்து உபயோகித்தால் முடியில் அதிகமான எண்ணெய்ப் பிசுக்கு அகன்று நல்ல சக்தியை அளிக்கும்.
சீயக்காய் 2 பங்கு, சிறுபயறு 1 பங்கு, வெந்தயம் 1 பங்கு எடுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும்போது 1 தேக்கரண்டி பொடியைக் கஞ்சியுடன் சேர்த்து தாளி இலைச்சாறு கலந்து அல்லது முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துப் பயன்படுத்தினால் ஷாம்பூவைப் பயன்படுத்துகின்ற பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...