Jan 28, 2013

பிரேசில் இரவு விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு

பிரேசில் இரவு விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு
பிரேசிலியா, ஜன.28-
 
பிரேசில் நாட்டின் சாண்டா மரியா நகரில் 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு விடுதி உள்ளது. இங்கு விடுமுறை தினமான நேற்று இரவு பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் விடுதியில் திரண்டு உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். அப்போது அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்புக்குழுவினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
தீ விபத்து ஏற்பட்ட மிகப்பெரிய ஹாலில் ஜன்னல் எதுவும் இல்லாததால், நச்சுப்புகையை சுவாசித்த பலர் சுருண்டு விழுந்தனர். சிலர் தீயில் கருகினர். இதனால் வாசல் வழியே வெளியேறுவதற்காக அனைவரும் முண்டியடித்து வந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்தனர்.
 
இன்று காலை நிலவரப்படி 150 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த சாவு எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தீ விபத்து இதுவாகும்.
 
இரவு விடுதியில் நடந்த இசைக் கச்சேரியில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...