Jan 28, 2013

கைவிரல் நகங்களைப்போன்றே கால்விரல் நகங்களும் கவர்ச்சியானதாக விளங்க கடைப்பிடிக்கவேண்டியவை...

News Service கைவிரல் நகங்களைப் போல போலவே கால்விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பாதங்களை அழகு படுத்த அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய் யப்படுகிறது. இதற்கு அதிகம் செல வழிக்க வேண்டியிருக்கும். ஆனால் வீட்டிலேயே நகத்தை அழகுபடு த்த ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன். கைவிரல் நகங்களுக்கு காட்டும் அக்கறையை பெரும்பாலோ னோர் பாத விரல் நகங்களுக்கு காட்டுவதில்லை. இதற்கு காரணம் அது யார் கண்ணிலும் படாமல் மறைவாக இருப்பதுதான்.
அதிகம் வளர்ந்தால் ஆபத்து :பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர் த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். எனவே விரலை தாண்டி வளர்ந் தாலே அவற்றை வெட்டி ஷேப் செய்துவிட வேண்டும். இல் லையெ னில் சதையில் குத்தி காயம் ஏற்படுத்திவிடும்.
  
கால் நகங்கள் அதிக கடினத் தன்மையுடன் இருக்கும் அவற் றை எளி தில் வெட்ட முடியாது. நகத்தை வெட்டுவத ற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்
பட்டவ ர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன் மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண் ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டி னாலும் எளிதாக வெட்டலாம்.
பாத நகங்களும் அழகாக : மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நக ங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் வெட்டலாம்.படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இரு ந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந் நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத் துங்கள்.
மஞ்சள் நகங்களா?ஒரு சிலருக்கு பாதத்தில் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவ ர்கள் உடனடியாக நகங்களை கவனிக்க வேண்டும். நகங்களை நன்றாக உரசி எடுத்துவிட்டு பாலீஸ் போடலாம். நெயி ல் பாலீஷ் போடும் போது, பிரஷ்ஷினா ல், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப் போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும். பாதங்களில் ஒருவாரத்திற்கு மேல் நெயில் பாலீஸ் போடவேண்டா ம். ஏனெனில் அது பாத நகத்தின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. என வே பாலீஸ் ரிமூவர் கொண்டு நகத்தை பாதுகாத்துக்கொள்ளுங் கள். நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக் கடி பயன்படுத்துவது நகத்தி ற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற் றை அடிக்கடி பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
பளபளப்பான நகங்கள் : கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங் கள் பளபளப்பாக இருக்கும். அதே போ ல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவி னால் கழுவினாலும் நகம் பளபளப் படையும். மாத் திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து கால் நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தி னால், அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய் த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும்செய்து வந்தால் நகங் கள் ஆரோக்கியமாக வளரும்.
ஊட்டச்சத்துள்ள உணவு : நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர் கள், சிறிதளவு பேபி ஆயிலி ல் நகங்களை மூழ்கும்படி வைத்தால், நகங்கள் உறுதியா கும். நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்து க்குறைபாடுகளே காரணம். எனவே நகங் கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகை களை சாப்பிட வேண்டும். அழகியல் நிபுணர்கள் கூறிய இந்த ஆலோ சனைகளை பின்பற்றினாலே போதும் ஆரோக்கியமான, அழகான பாத நகங்கள் கிடை க்கும். பாத நகங்களை அக்கறையுடன் பராமரிப்பதன் மூலம் பெரும்பாலான நோய்களில் இருந்து பாதுகாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
Back to News

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...