Jan 28, 2013

சீன ராணுவம் தயாரித்திருக்கும் மிகப்பெரிய சரக்கு விமானம்


 சீன ராணுவம் தயாரித்திருக்கும் மிகப்பெரிய சரக்கு விமானம்பெய்ஜிங்,ஜன.28 (டி.என்.எஸ்) அமெரிக்கா, ரஷியாவை தொடர்ந்து சீன ராணுவம் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்றை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் ராணுவம, அதிக எடையுள்ள ராணுவ டாங்கிகள் மற்றும் உபகரணங்களை எடுத்துச் செல்வதற்காக மிகப்பெரிய சரக்கு விமானங்களை வைத்துள்ளன. இந்த நாடுகளின் வரிசையில் தற்போது சீனாவும், இதுபோன்ற சக்தி கொண்ட மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளது.

66 டன் எடையுடன் 13 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய திறன் கொண்ட இந்த விமானத்தின் என்ஜின் ரஷியாவின் நவீன தொழில் நுட்பத்துடனுடம், உதிரி பாகங்கள் சீன தொழில் நுட்பத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒய்-20 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஷான்ஸி மாகாணத்தின் யங்லியாசா விமான நிலையத்தில் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் மூலம் இந்திய எல்லையில் மிக உயரமான மலைப்பகுதியில் உள்ள திபெத்துக்கு ராணுவ தளவாடங்களை எடுத்து செல்ல முடியும். தற்போது சென்சாகு தீவு பிரச்சினையில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே சீனாவுக்கு பிரச்சினை உள்ளது.

அதை சமாளிக்கும் விதமாக இந்த அதிநவீன சரக்கு விமானத்தை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. (டி.என்.எஸ்)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...