Jan 23, 2013

பருமன் அதிகம் ஆனால் பலம் இல்லை – பெண்களுக்கு புதிய சிக்கல்!

பருமன் அதிகம் ஆனால் பலம் இல்லை – பெண்களுக்கு புதிய சிக்கல்!

மூதாதையர்களை விட, நவீன கால பெண்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர். குறைவாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்´ என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெற்கு அவுஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையின் பேராசிரியர் கிராண்ட் டாம்கின்சன் கூறியதாவது...

பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு உடல் வலிமை குறைந்துவிட்டது. சாதாரண உடற்பயிற்சியான உட்காருதல், எழுதல் போன்றவை கூட, 8 முதல் 10 சதவீதம் குறைந்துவிட்டது.

1985ம் ஆண்டு வரை, உடல் வலிமையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இருந்ததில்லை, அதற்குப் பின், உடல் எடை கூடியுள்ளதே தவிர, உடல் பலம் கூடவே இல்லை. நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது.

குறிப்பாக, பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

லண்டனை சேர்ந்த முட நீக்கியல் நிபுணர் சமி மார்கோ கூறுகையில், பெண்கள் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் ஆனால்,  அதற்கேற்ற பலம் அவர்களிடத்தில் இல்லை என்றார்.

பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கென் பாக்ஸ் கூறியதாவது, உடல்பலம் குறைவுதான் பெரும்பாலான நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. எலும்பு முறிவு, மூட்டுவலி, முதுதண்டு வலி போன்ற உபாதைகளுக்கு இதுவே மூலகாரணம். தங்களின் உடலை மெலிதாக வைத்துக் கொள்ளவே பெண்கள் விரும்புகிறார்கள். இதனால்,அதிகமாக சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...