Jan 23, 2013

அடுக்குமாடி கட்டடங்களால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆபத்து!

அடுக்குமாடி கட்டடங்களால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆபத்து!




Temple images
பெரும்பாலான கோவில்களுக்கு அருகில், அடுக்குமாடி கட்டடங்கள் அமைக்கப்படுவதால், கோவிலின் கட்டுமானம் சிதைந்து வருகிறது. தற்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கற்கள் விழுந்ததற்கும் அதுவே காரணமாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலம். இக்கோவில், 156 ஏக்கர் பரப்பளவில், சப்த எனப்படும் ஏழு
பிரகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமைந்துள்ளது. தற்போது, இக்கோவிலைச் சுற்றி, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், கோவிலின் கட்டுமானத்திற்கு பிரச்னை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், கோவில் மதிற் சுவரில் கற்கள் இடிந்து விழுந்ததற்கு, இதுவே, காரணமாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே, கோவிலின் கட்டுமானம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒட்டுமொத்த வளாகத்திற்கும் ஆபத்து வரும் அபாயம் உள்ளது.
வெடிப்பு வந்தது : ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட, 1984ம் ஆண்டே, முதல் நிலையில் வெடிப்பும், வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கட்டடங்களில் வெடிப்பும் ஏற்பட்டது. வெடிப்பை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 1986 ஜன., 8ல் முதல்ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. பொதுப்பணித் துறை, தலைமை பொறியாளர் (கட்டடம்) தலைமையிலான குழுவினர் கோவிலை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், கோவில்பழமையானது என்பதால், நிலத்தில்கட்டட, அடிப்பகுதி சிறிது இறங்கலாம் என தெரிவித்தனர்.அதை உறுதி செய்தவதற்கும், பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், இரண்டாவதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதன் முடிவாக, கோபுரம் அருகே துளையிடப்பட்டு மண்ணின் நிலை பரிசோதிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடித்து, மூன்று ஆண்டு, எட்டு மாதம் கழித்து, மொத்த அமைப்பும், 18 செ.மீ., மண்ணில் இறங்கி இருப்பதாககூறப்பட்டது.சென்னை அண்ணா பல்கலையின், நகர்வு மின்னணுவியல் ஆய்வின் மூலம் கோபுர உச்சியில், 0.6 அங்குலம் முதல், 7.1 அங்குலம் வரை நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதற்கு, கோவில் கட்டுமானத்தை வலுப்படுத்த வேண்டும் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
பல வகையில் முயற்சி: கோவிலின் கட்டுமானத்தை, பலப்படுத்துவதற்கு, திருச்சியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம், சுற்றுச் சுவரை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையும், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் போன்ற பகுதிகளை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு அருகே, ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, கோவிலுக்கு அருகில், பல வணிக கட்டடங்களும், விடுதிகளும் அமைந்துள்ளது. இங்கு, கட்டுமானப் பணிகள் நடக்கும் போது, கோவிலையும் பாதிக்கிறது.
கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து, 10 அடி தொலைவில் இடைவெளி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், அதையும் மீறி, கோவில் கோபுரத்தை ஒட்டியே, பல கடைகளும் வீடுகளும் உள்ளன; இதனால், பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, பல வகையில் முயற்சி செய்தும், முடியாமல் போனது. கோவிலை காப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...