Jan 21, 2013

பூண்டு மருத்துவம்



மருத்துவமும் இன்றைய விஞ்ஞானமும் பூண்டின் மருத்துவ குணம்  மகத்தானது என்கின்றனர் .இரத்தத்தில் உள்ள கொலஸ்றாளை குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.
ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. 100 கிராம் பூண்டில் தண்ணீ­ர்ச் சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.
மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.
பூண்டின் முக்கிய மருத்துவப் பயன்கள் : சீரணமின்மை ,ஜலதோஷம்,காதுவலி,வாயுத்தொல்லை,முகப்பரு,ஊளைச்சதை,இரத்த சுத்தமின்மை, புளுத்தொல்லை, இரத்த அழுத்தம் ,சம்பந்தமான நோய்கள்,மூல நோய் போன்றவை வராமல் தடுக்கவும் வந்தால் குணப்படுத்தவும் பூண்டு வல்லமைஉடையது.

கடும் காய்சலா : 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்துவிட்டால் வெள்ளைப்பூண்டு சாற்றை உள்ளங் கையிலும் உள்ளங் காலிலும் நன்கு தேய்க்கவும் காய்ச்சல் குறையும்.

விடாத இருமலா: படுக்க போகும் முன் பூண்டு விதைகளைப் போட்டு காய்ச்சி பூண்டையும் பாலையும் சாபிடுக. சிறப்பாக அலர்ஜியால் ஏற்படும் இருமலுக்கு இம்முறை சிறந்தது.

இரத்தக்காயமா : வெள்ளைப் பூண்டையும் சுண்ணாம்பையும் சம அளவு அரைத்து காயத்தில் வைத்துக் கட்டினால் ஒட்டிக்கொள்ளும்.காயம் ஆறின பின் அது தானாகவே அது விழுந்து விடும்.
எகிப்தின் பிரமிடுகளைக் கட்டிய தொழிளாலர்கள் வெங்காயமும்,பூண்டு உண்டுதான் ஆற்றலுடன் செயற்பட்டர்களான வரலாறு கூறுகின்றது. 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...