Feb 4, 2013

300 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானி நியூட்டன் எழுதிய புத்தகங்கள்!

News Service
விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் கிடைத்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதை கண்டுபிடித்தவர். ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு என்பது உள்பட இயக்கம் தொடர்பான விதிகளை (லா ஆப் மோஷன்) கூறியவர். இயற்பியல் மட்டுமின்றி கணக்கு, வானியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் வல்லுனராக திகழ்ந்தவர். இங்கிலாந்தில் கி.பி. 1642-ல் பிறந்த இவர் 1727-ல் இறந்தார்.
 
தன் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தின் ஸ்டபோர்டுஷயர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் வில் கார்சைடு (16) என்ற மாணவன் ஈடுபட்டிருந்தான். அப்போது லைம் என்ற பள்ளி வளாகத்தின் ஆய்வுக்கூடத்தில் ஒரு பீரோவில் தூசி படிந்த நிலையில் ஒரு பெட்டி இருப்பதை அவன் கண்டுபிடித்தான். அந்த பெட்டியில் 3 புத்தகங்கள் இருந்தன. அவை லத்தீன் மொழியில் ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள்.
பிலாசபி நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேடிகா என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த புத்தகம் மூன்று பாகங்களாக உள்ளன. 1687-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டவை. அந்த புத்தகங்களில் புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகள் தொடர்பாக ஏறக்குறைய 1000 பக்கங்களுக்கு நியூட்டன் எழுதியுள்ளார். அந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக 1874-ல் இருந்த பிரான்சிஸ் எலியன் கிச்சனர் என்பவர் அந்த புத்தகங்களை வைத்திருந்திருக்கலாம் என தெரிகிறது. புத்தகங்கள் வரலாற்று பெருமை வாய்ந்தவை என்பதால் அவற்றை விற்கப் போவதில்லை என்று பள்ளி நிர்வாகி ஜூலி கூறியுள்ளார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...