Feb 4, 2013

வெளிநாட்டு கோடீஸ்வரர்களுக்காக சுவிஸ் வங்கிகளில் புதிதாக பெட்டகவசதி!

News Service
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களுக்காக, தங்கக் கட்டிகள், அதிக மதிப்புடைய சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஆகியவற்றை சேமிப்பதற்கான பெட்டக வசதி உள்பட சிறப்பு கணக்கு சேவையை தொடங்கி உள்ளன. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிஸ் வங்கிகள் இந்தத் தகவலை தெரிவித்தன.
தங்கக் கணக்கு மற்றும் வைரம், 1,000 சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை சேமிப்பதற்கான பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கான கட்டணங்களை இவ்வங்கிகள் கணிசமாக உயர்த்தி உள்ளன. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் கறுப்புப் பணத்துக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் அடைக்கலம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வங்கிகளில் இந்தியர்கள் மட்டும் பல லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் ரகசியக் கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியர்கள் ரூ.12,800 கோடி முதலீடு செய்திருப்பதாக சுவிட்சர்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. சேமிப்புக் கணக்கில் உள்ள முதலீடு தொடர்பான விவரங்களை மட்டுமே கேட்டுப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன. இந்த ஒப்பந்தங்களின்படி, பாதுகாப்புப் பெட்டக விவரங்களை கேட்க முடியாது என்பதால், இத்தகைய புதிய சேவையைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...