Apr 8, 2013

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணம்லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் இன்று காலமானார். பிரிட்டனின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்படும் இவர் சமீப காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு வயது ( 87 ) . பிரிட்டனில் 19 ம் நூற்றாண்டு முதல் அதிக காலம் பிரதமராக இருந்த பெருமை இவருக்கு உண்டு. மேலும் இவரே பிரிட்டனின் ஒரே பெண் பிரதமர் ஆவார்.
‘ இரும்பு பெண்மணி ’-

பிரிட்டன் பிரதமராக கடந்த 1979 முதல் 1990 வரை இவர் பதவி வகித்து வந்தார். இவரது தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 3 முறை வெற்றியை தழுவி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவர் அமெரிக்க நாட்டுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தார், இந்நாட்டுடன் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளார். பிரிட்டனில் பொருளாதார முன்னேற்ற பணிகளை ஏற்படுத்தியதில் இவருக்கு தனிச்சிறப்பு உண்டு. இவர் ‌எந்‌தவொரு முடிவையும் தைரியமாக எடுக்க கூடியவர். பால்க்லாண்டு தீவு தொடர்பான பிரச்னையில், கடந்த 1982ல் அர்ஜென்டினாவுடன் போர் நடத்தினார்.இதனால் இவர் இரும்புபெண்மணி என பெயர் பெற்றார்.

பதவியிழந்த போதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் கடந்த 2002 முதல் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். சமீப காலமாக இவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மறைவு பிரிட்டன் மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கானவர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் அரசு தரப்பில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...