Jun 19, 2013

மழை ஆடிய ஆட்டம் - 39 மாவட்டங்கள் அதி கூடிய எச்சரிக்கையில்




மழை ஆடிய ஆட்டம் - 39 மாவட்டங்கள் அதி கூடிய எச்சரிக்கையில்!!! (காணொளிகள்)


நேற்று புதன்கிழமை மாலை 17 மணியளவில் பரிசையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் (Ile de France) கடும் புயற்காற்றுடன் கூடிய பெருமழை தாக்கியது. பல வர்த்தக மையங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. ORLY விமான நிலையம் தற்காலிகமாக சிறிது நேரம் மூடப்பட்டது. இதன் Terminal T1 பகுதியில் ஆறு பேர் சிறு காயங்களுக்க உள்ளாகி உள்ளனர். 
பல வீடுகள் மின்னல் தாக்கி எரிந்துள்ளன. போக்குவரத்துக்கள் பெருமளவில் தடைப்பட்டன. பல இடங்களில் வீதிகள் வேகம் கொண்டு ஓடும் ஆறுகளாக மாறின. மரங்கள் வீழ்ந்து வீடுகள் சேமானதுடன் வீதிகளும் தடைப்படன. முக்கியமாக 77 வது மாவட்டமான Seine et Marne பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.Monterault, Fontainebleau, Pontault-Combault, Noisiel ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இன்னமும் இங்குள்ள வீடுகளினதும் வீதிகளினதும் சேதவிபரங்களை நகரசபைகளால் திரட்ட முடியாமல் உள்ளது.
Yvelines பகுதியில் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில்
மிகவும் சிரமத்துடன் பெருமளவான மீட்புப் பணிகளைச் செய்து வருகின்றனர். 
95வது மாவட்டமான Val-d'Oise இல் Thillay கிராமத்தின் வீதிகளும் வீடுகளும் வெள்ளக்காடாய் மாறியுள்ளனர்.
93 வது மாவட்டமான Seine-Saint-Denisயில் பல பெரும் வர்த்தக மையங்கள் கூரைகள் உடைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. Arcades-Noisy-le-Grand, Usinecenter - Gonese , Castorama-Villemomble போன்றவை சேதத்திற்கு உள்ளாகி உள்ளன.
 
செவ்ரோனிலுள்ள BeauSevran வர்த்க மையத்தில் உள்ள Carrefour -Brice கூரை உடைந்து மழை நீர் உள்புகுந்ததால் அவசர அவசரமாக மக்களை வெளியேற்றி பூட்டப்பட்டது. எமது பிரத்தியேக நிருபர் இக்காட்சிகளைப் பரிஸ்தழிழ்.கொம் இற்காகப் படம் பிடித்துள்ளார்.
Val-de-Marne மாவட்டத்திலுள்ள Créteil, Maisons-Alfort, Alfortville, Valenton போன்ற நகரங்களில் உள்ள 2500 வீடுகளுக்கு மேல், புயலால் மின்வழங்கிகளில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளிற்கு நள்ளிரவிற்குள் மின்சாரம் மீள் வழங்கப்படும் என தீவிரமாக களப்பணியில் இறங்கியிருக்கும் பிரான்ஸ் மின்சார சபை (EDF) தெரிவித்துள்ளது.
Champigny-sur-Marne (Val de Marne)பகுதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளகி உள்ளன.
Coeuilly à Champigny-sur-Marne
94ம் மாவட்டமான Val de Marneஇல் உள்ள Bry-sur-Marne தொடருந்து நிலையத்தை அண்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு Saint-Camille  வைத்திசாலையின் நிலக்கீழ்ப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு நோயாளிகளையோ அவசர முதலுதவி வாகனங்களையோ உள்ளே கொண்டு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
La gare RER de Bry-sur-Marne (Val-de-Marne)
Aulnay-sous-Bois வில் ஒரு வீடு இடி வீழ்ந்து எரிந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...