Jun 19, 2013

கூகிளில் தேட கற்றுக்கொள்ளுங்கள்

Tips to Search in Google search engine

வணக்கம் நண்பர்களே.. !

உலகில் பெரும்பாலான இணைய பயனர்கள் தேவையான தகவல்களை கூகிள் தளத்தின் மூலம் தேடிப்பெறுகின்றனர். விரைவாக தேடல் முடிவுகளைத் தருவதில் கூகிள் தளத்திற்கு நிகர் வேறெந்த தளமும் இல்லை.. இதானால் கூகிள் நிறுவனமே பல புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக பல்வேறு பயனுள்ள தளங்களையும் வழங்கி செயல்படுத்தி வருவதை கூறலாம். 


சரி.. கூகிள் தேடல் தளத்தில் உங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற சிறந்த வழிமுறைகள் உள்ளன. சாதாரணமாக நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்றிரண்டு தொடர்பில்லாத முடிவுகளும் கிடைக்கும். குறிப்பாக முதற் பக்கத்தில் நீங்கள் தேடிய விஷயங்கள் கிடைக்காமலேயே போகும் வாய்ப்புகள் சில சமயம் ஏற்படுவதுண்டு. 


இனி, அவ்வாறு நிகழாமல் உங்களுக்குத்  என்ன தேவையோ, எது குறித்தான தகவல்கள் தேவையோ அவற்றை மட்டும் தேடிப்பெற முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் கீழே காண்போம். 

'+' குறியீடு: 


தேடல் பெட்டியில் நாம் உள்ளிட்ட சொற்றொடரில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாக '+' சேர்த்து தேடும்பொழுது தேடல் முடிவுகளில் நிச்சயமாக '+'  குறியிடப்பட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். 
உதாரணமாக Specifications of +Samsung Android smartphone

'-' குறியீடு: 


மேலே குறிப்பிட்ட செயலுக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது '-' குறியிடப்பட்ட வார்த்தை தேடல் முடிவுகளில் இடம்பெறாது. 
உதாரணமாக Specifications of -Samsung Android smartphone

'~' குறியீடு: 

கூகிள் தேடல் பெட்டியில் தேடுகின்ற சொல் அல்லது சொற்றொடரில் உள்ள வார்த்தைக்கு முன்பாக '~' சேர்த்து தேடும்பொழுது அச்சொல்லிற்கு இணையான (Synonym)சொற்களை தேடல் முடிவில் காட்டும்.. 

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட: 


உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தேடல் முடிவுகளைப் பெற கூகிள் தேடல் பெட்டியில் site:techbeen.com/android என உள்ளிட்டு தேடல் முடிவுகளைப் பெறலாம்.. இதில் Site என்ற வார்த்தையானது, அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடும்படி கொடுக்கும் கட்டளையாகும். 

உதாரணமாக 
site:techbeen.com/android 
site:website url/search word

குறிப்பிட்ட சொல்லின் பொருளை தெரிந்துகொள்ள : 


ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருள் அறிய இந்த 'define' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். அதாவது கூகிள் தேடல் பெட்டியில் define: HTC எனத் தேடினால் HTC என்றால் என்ன என்பதற்கான பொருள் கிடைக்கும். 
உதாரணமாக define:smartphone

"" குறியீடு:

இந்த இரட்டை மேற்கோள் குறிக்கு நடுவில் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை உள்ளட்டு கூகிள் தேடல் பெட்டியில் தேடும்பொழுது எந்த வார்த்தை அல்லது சொற்றொடர் அப்படியே இடம்பெற்ற தளங்கள் தேடல் முடிவுகளாக கிடைக்கும். 
உதாரணம்: "Smartphone specifications, reviews, news"

'*' குறியீடு: 

இந்த குறீயீட்டை சொற்களின் பின்பகுதியில் பயன்படுத்தும்பொழுது அந்த சொல்லின் முழுமையான வடிவம் நமக்குத் தெரியும். 

உதாரணமாக tech been*

'?' குறியீடு: 


ஒரு சொல்லுக்கான அனைத்து எழுத்துகளும் உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் முதலிரண்டு அல்லது மூன்று எழுத்துகளுக்குப் பிறகு '?' குறியைப் பயன்படுத்தும்பொழுது அதற்கான முழுமையான சொற்களை தேடல் முடிவில் காட்டும். 

பூலியன் ஆப்பரேட்டர்: 

பூலியன் ஆபரேட்டர் என்பவை AND, NOT, OR ஆகும்.  

இரு சொற்களுக்கு இடையே இந்த பூலியன் ஆபரேட்டரைப் பயன்படுத்தும்பொழுது தேடக்கூடிய சொற்களில் ஏதேனும் ஒன்றை இணைப்பில் தரும். 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...