Jun 19, 2013

ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ் - எது பெஸ்ட்

Android OS, Apple iOS, Blackberry, Windows 8 which is the best? ஸ்மார்ட் போன் உலகில்  கொடிகட்டி பறக்கும் இயங்குதளம் என்ன என்பதைப் பற்றியே இன்றையப் பதிவு.

ஸ்மார்ட் போன்களில் இயங்ககூடிய இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் மட்டுமல்ல... மற்ற நிறுவனங்களின் இயங்குதளங்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்(Apple iOS). பிளாக்பெர்ரி(Blackberry), விண்டோஸ்8 (Windows phone 8) ஆகியவைகளை குறிப்பிடலாம்.  



கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் (Google Android OS) வரவிற்கு பின்பு, கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த விண்டோஸ்போன் இயங்குதளம், பிளாக்பெர்ரி, ஆப்பிள் ஐ.ஓ.எஸ். அனைத்துமே இறங்குமுகத்தை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டது.

காரணம் அந்நிறுவனங்களின் இயங்குதளங்களைவிட கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் (User Friendly),  தன்னுடைய இடத்தை நிலையாக பிடித்துவிட்டது.மற்ற இயங்குதளங்களின் இடத்தையும்  மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.

விண்டோஸ்போன் இறங்குமுகத்திற்கு மைக்ரோசாப்ட் அதனுடைய பயன்பாட்டை விரைவாக மக்களிடையே கொண்டு செல்லாததுதான் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. எனினும், உலக அளவில் ஸ்மார்ட்போனில்  பயன்படுத்தப்படும் இயங்குதளங்களை ஒப்பு நோக்கும்போது கூகிள் ஆண்ட்ராய்ட் முன்னேறிவருகிறது என்பது கண்கூடு.

தற்போது உள்ள நிலைமையில்

1. கூகிள் ஆண்ட்ராய்ட் முதல் இடத்திலும்,(Google Android first place)
2. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். இரண்டாவது இடத்திலும்,(Apple's iOS Second place)
3. பிளாக் பெர்ரி மூன்றாவது இடத்திலும் (Black Berry ranked third)
4. விண்டோஸ் போன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.(Windows Phone been the fourth place)

Google Android, Apple iOS, Black Berry, Windows Phone 8 are the Smartphone OS. In this post explains, which is the best performance in the smartphone. 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...