Nov 16, 2013

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சில சிறப்பான வழிகள்



உற்சாகமில்லாதது போல உணர்கிறீர்களா? வழக்கமான பாதையிலிருந்து விலகியது போல உணர்கிறீர்களா? சருமப் பிரச்சனைகள், தலைவலி, உடல் வலிகள் அல்லது செரிமானக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? அப்படியெனில் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது என்று பொருள். மேலும் இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம்.
இதற்கு ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் சீன மருத்துவ முறை உள்பட உலகமெங்கும் பல
நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நச்சு நீக்கும் முறைகள் உள்ளன. உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவது என்பது, ஓய்வெடுத்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் புத்துணர்வூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உடலிலிருந்து நச்சுப்பொருளாகிய டாக்ஸின்களை நீக்கி அறவே இல்லாதொழித்தலாகும். அதன் பின் ஆரோக்கியமான சத்துப்பொருட்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி உடலிலுள்ள நச்சினை நீக்குவதன் மூலம், நமது உடலினை வேறு நோய்கள் தாக்காவண்ணம் பாதுகாக்கலாம். இதனால் அது உடலை அதிகப்படியான ஆரோக்கியத்துடன் திகழ உதவுகிறது.
நச்சு நீக்கும் முறை என்பது எப்படி செயல்படுகிறது?
நச்சு நீக்குதல் என்பது அடிப்படையில் இரத்தத்தினை சுத்தப்படுத்துதல் ஆகும். டாக்ஸின்கள் உற்பத்தி செய்யப்பட்டு செயல்படத் தொடங்கும் இடமான கல்லீரலில், இரத்தத்திலிருந்து அசுத்தங்களை நீக்குவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. நமது உடலே, சிறுநீரகங்கள், குடல்கள், நுரையீரல்கள், நிணநீர்க் குழாய்கள் மற்றும் சருமம் வழியாக டாக்ஸின்களை வெளியேற்றிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அசுத்தங்கள் முழுமையாக நீக்கப்படுவதில்லை. இதன் மூலம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன.
ஆகவே நமது உடலிலுள்ள நச்சுக்களை நீக்கிய பிறகு பின்வரும் உணவுகள், உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி, உடலினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...