Nov 16, 2013

போட்டோஷாப்பில் அருமையான Border Effect..!

போட்டோஷாப்பில் அருமையான Border Effect..!


வணக்கம் நண்பர்களே..!

போட்டோஷாப்பில் படங்களுக்கு பல வகைகளில் பார்டர் அமைக்கலாம். எத்தனையோ முறைகள் உண்டு. 

இந்த பாடத்தில் எளிமையான படங்களுக்கு பார்டர் எஃபக்ட் கொடுப்பது எப்படி என்பதைப் பாப்போம். 

முதலில் தேவையான படத்தை Photoshop CS3 மென்பொருளில் திறந்துகொள்ளுங்கள். 

border-effect-in-cs3-photoshop


  • அடுத்து புதிய லேயர் ஒன்றினை உருவாக்கிடுங்கள்.. (Ctrl+Shift+N)
  • அதை வெண்மை நிறத்தில் நிரப்பவும். (இதற்கு உங்களுக்கு Fill கட்டளை உதவும். அல்லது Shift+F5 குறுக்கு விசைப் பயன்படும். 
  • தோன்றும் விண்டோவில் white என்பதை தேர்ந்தெடுத்தால் லேயர் முழுவதும் வெண்மை நிறத்தில் நிரம்பிவிடும். 
    border-effect-in-cs3-photoshop
  • இப்பொழுது ரெக்டேங்குலர் டூலைப் பயன்படுத்தி, படத்திற்கு வேண்டிய பார்டரை வரைந்துகொள்ளுங்கள். 
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி முழுவதையும் கருப்பு நிறத்தில் நிரப்பிக்கொள்ளுங்கள். (இதற்கும் Fill கட்டளைப் பயன்படும்). அல்லது பக்கெட் டூலைப் பயன்படுத்தியும் வண்ணத்தை நிரப்பலாம். 
  • இப்பொழுது நாம் செலக்ட் செய்த பகுதி அப்படியே இருக்கும். அதை நீக்க Ctrl+D கொடுக்கவும். 
  • பிறகு அந்த லேயரை ஸ்மார்ட் ஆப்ஜெக்ட்டாக மாற்றிக்கொள்ளவும். ஸ்மார்ட் ஆப்ஜெக்ட் ஆக மாற்றுவதற்கு லேயரின் மீது ரைட் கிளிக் செய்து Smart Object  என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • பிறகு ஃபில்டர் மெனு சென்று, Gussian Blur என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் ரேடியஸ் 16 பிக்சல் வைத்து ஓ.கே கொடுக்கவும். 
  • இப்போது படம் இவ்வாறு மாறியிருக்கும். 
  • அடுத்து பில்டர் மெனு சென்று பிக்சலேட் ==> Halftone என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் max.Radius என்பதில் 12  பிக்சலும், Screen Angels என்பதில் உள்ள Channel 1, Channel 2, Channel 3, Channel 4 ஆகிய அனைத்திலும் 45 என கொடுத்து ஓ.கே கொடுக்கவும். 
  • இப்பொழுது அந்த லேயரை Screen Mode க்கு மாற்றிக்கொள்ளவும். 


அவ்வளவுதான். இனி உங்களுடைய போட்டோவிற்கு ஒரு சூப்பர் பார்டர் எஃபக் கிடைத்துவிட்டது..

குறிப்பு: உங்கள் போட்டோவிற்கு ஏற்றாற்போல Halftone பில்டரின் அளவுகளை கூட்டி அல்லது குறைப்பதன் மூலமாக நல்லதொரு பார்டர் எபக்டினை பெற்றுக்கொள்ள முடியும். 



இதுபோன்று நீங்களே பல்வேறு எஃபக்ட்களை கொடுத்து மகிழலாம். 

நன்றி.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...