Mar 31, 2014

பச்சைக் கீரைகள்

பச்சைக் கீரைகள் ஊட்டசத்துக்களின் உற்பத்தி மையங்கள் என்று கருதப்படும் கீரைகளில் பைட்டோநியூட்ரிஷன் சத்துக்களும், வைட்டமின்களும் மற்றும் தாதுக்களும் உள்ளதால் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சி இவற்றை சாப்பிடுவதால் ஊக்கம் அடைவதை யாராலும் மறுக்க முடியாது. USDA-வின் பரிந்துரைகளின் படி, ஒரு வாரத்திற்கு 3 கோப்பையாவது பச்சைக் கீரைகளை சாப்பிடவேண்டும்
முட்டைகள் புரதச்சத்து மிகுந்த உணவாக நன்கு அறியப்பட்டிருக்கும் முட்டையில், மூளையின் செயல்பாடுகளின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான சத்துக்களும் உள்ளன. அது மட்டுமல்லாமல், முக்கியமான வைட்டமின்களை அளிக்கவும் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்களை வரவழைக்காத வகையில் கொழுப்பின் அளவுகளைகட்டுப்படுத்தவும் முட்டை உதவுகிறது. 
வேர் காய்கறிகள் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகிய சத்துக்கள் அடங்கிய கேரட், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகள் இந்த வகையில் வருகின்றன. இவை பழங்காலங்களில் வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதர்கள் சேகரித்து வைக்கும் உணவுப் பொருட்களைச் சேர்ந்தவையாக உள்ளன.

 வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய பழங்கள் மரங்களில் காய்த்துக் கிடக்கும் கனிகளும், காய்களும் தான் நாடோடி வேட்டையனாக திரிந்து கொண்டிருந்த பழங்கால மனினின் மற்றுமொரு முக்கிய உணவாக இருந்தது. இந்த காய்கள் மற்றும் கனிகளில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்றவற்றிற்கு குறையொன்றும் இருக்காது. மிகவும் அதிகமான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென்று உயர்ந்து விடும் பலவீனத்தை இவை தடுக்க உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ளதால் எண்ணற்ற பிரச்சனைகளில் நாம் சிக்குவதையும் அவை தவிர்க்க உதவுகின்றன. நிறைய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் உதவுவதால், நமது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்படுகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...