Mar 31, 2014

திசை மாறி தேடப்படும் மலேசிய விமானம்!

இந்தியப்
 பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மாற்றப்பட்டுள்ளது.மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் திகதி அதிகாலை நடுவானில் மாயமானது.
அந்த விமானத்தின் நிலைமை என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான
தகவல் ஏதுமில்லை.
இந்நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கிலோ மீற்றர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும், இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.
நியூசிலாந்தின் ஆர்யான் விமானம் ஒன்று கடலில் பொருட்கள் கிடப்பதை பார்த்துள்ளதாகவும், இருந்த போதிலும் இந்த பொருட்கள் விமானத்தின் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் தானா என்று உறுதிசெய்யப்படவில்லை.
இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான துப்புக்களின் அடிப்படையில் உள்ளது என்று அவுஸ்திரேலியா கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...