Mar 31, 2014

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்

 ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால் மட்டுமே மனத்தெளிவை பெற்று, நோய்கள் மற்றும் உடல் பலவீனத்தை தடுத்து, நோய்களில் இருந்து எளிதில் குணமடையும் சக்தியை பெற்று, அதிக ஆற்றல் திறனுடன் விளங்க முடியும். நல்ல உணவுமுறையால், உடலுக்கு நல்ல ஆற்றலும், உடம்பில் உள்ள நீண்ட கால நோய்களை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு கிடைக்கும். வயதான காலத்தில் நல்ல உணவு முறையால், நல்ல மனநிலையையும், உணர்வுகளில் நிலைப்பாட்டையும் பெற முடியும். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து தேவைகள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.வயதான பிறகு கலோரிகளை எரிக்கும் திறன் நமது உடலுக்கு குறைந்து விடும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும். தவறான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் சிகரெட் பிடித்தல் போன்ற சில காரணங்களாலேயே பொதுவாக மக்களுக்கு நோய்கள் ஏற்படுகிறது, அதுவும் வாசன காலத்தில். இதனை சரியான நேரத்தில் கவனித்து விட்டால் இந்த நோய்களில் இருந்து சீக்கிரமே விடுபடலாம். ஊட்டச்சத்து மிக்க உணவு முறையை பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்வோடு நேர்மறையான வாழ்க்கை முறையோடும் வாழலாம். ஆரோக்கியமற்ற உணவு முறை நம் எடையை அதிகரித்து, வயதான காலத்தில் நீடித்த நாள்பட்ட நோய்களில் நேரடியாக தள்ளி விடும். பொதுவாக வயதான பிறகு நோய்களில் இருந்து மீண்டெழும் தன்மை குறைந்து விடும். இதன் காரணமாக ஐம்பது வயதிற்கு மேற்பட்ட காலங்களில், உடலானது ஆரோக்கியத்தை இழந்து, தேவையற்ற நோய்களின் உறைவிடமாக திகழ்கிறது. இதனால் நீங்கள் கண்டிப்பாக அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் வெவ்வேறு வண்ணமுள்ள உணவுகள், முழுதானிய உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் பாதி அளவாவது முழு தானியம் இடம் பெறுவது அவசியம். மேலும் நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், வாரத்திற்கு இருமுறை கடல் உணவு எடுத்து கொள்ளுதல் நல்லது.
 வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...