Apr 11, 2015

ரோஜாவின் மருத்துவ குணங்கள்


Rose (800x599)
அனைவரும் விரும்பும் அழகான ரோஜாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
1. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.
2. பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும்
பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.
3. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும்.
4. பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...