Apr 11, 2015

முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு



tnn-mஇண்டு என்று பெயரை பார்த்ததும் சற்று புருவத்தை உயர்த்தி, என்ன செடி அது? என கேட்க தோன்றும். ஆனால் அது நம் கண் முன்னே படர்ந்து கிடந்து மனிதயினத்தை வாழ்விக்க வந்தது, என்பதை நம்மில் பலருக்கும் தெரியாமலேயே உள்ளது.
முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம்தான் ஆதல்
சத்திக்கு வித்துத் தனது உபசாந்தமே’’
தமிழகம் மற்றும் புதுவையில் சிறுகாட்டுப்பகுதிகளிலும், வேலிகளிலும் தானாகவே வளரும் ஏறுகொடியினம். இதன் இலைகள் கூட்டமைப்பில் சிறகு போன்று இருக்கும். செடி முழுவதும் வளைந்த
கூர்மையான முட்கள் நிறைந்து இருக்கும். காலையில் பூக்கும் இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும். வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.
கோழையகற்றி நாடி நடை மற்றும் உடலின் வெப்பத்தையும் அதிகரிக்கும் குணம் கொண்டது. இண்டின் தண்டினை துண்டாக நறுக்கி ஒரு பகுதியில் வாயால் ஊத மறுபக்கத்தில் வரும் ரசத்தை பிடித்து 15மிலி அளவில் 3 நாள் ஈளை இருமல் உள்ளவர்களுக்கு கொடுக்க குணம் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்தால் சளி மாந்தம் தீரும். இண்டு செடியின் சமூலத்தை எடுத்து அதனுடன் தூதுவேளை, கண்டங்கத்தரி வகைக்கு ஒரு பிடி அளவில் எடுத்துக்கொண்டு அதனுடன் திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அது கால் லிட்டராக சுண்டிய பிறகு இறக்கி ஆறவைத்து கொள்ள வேண்டும்.
இதில் காலை மாலை 100 மிலி வீதம் குடித்து வந்தால் இரைப்புடன் வரும் இருமல் தீரும். குழந்தைகளுக்கு அவர்களின் உடல் தன்மை அறிந்து 25 மிலி வீதம் கொடுக்கவேண்டும்.ஈயக்கொழுந்து, தூதுவளை, சங்கன் இலை, திப்பிலி, கண்டங்கத்தரி, இவற்றை சம அளவாக எடுத்துக்கொண்டு சிறிதளவு சுக்குசேர்த்து சரக்கின் அளவிற்கு எட்டுபங்கு தண்ணீரில் அதை போட்டு காய்ச்சி 1லிட்டராக சுண்டிய பிறகு எடுத்து வைத்து கொண்டு அதை காலை மாலை 50 மிலி வீதம் குடித்து வந்தால் எந்த வகையான இருமல் நோயும் 3 நாளில் முற்றிலும் நீங்கும். சிலருக்கு நடந்தாலோ அல்லது பேசினாலே மூச்சுவாங்கும். இவர்கள் இண்டம்வேர், தூதுவேளை வேர் இரண்டும் தலா 2கிராம் எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக்காய்ச்சி அதில் 100 மிலி வீதம் காலை மாலை குடித்துவர இரைப்பு தீரும்.
நசத்தை போக்கும் பெருகியதோர் நீரேற்றம்
தானசிக்கச் செய்யுமிது சத்தியங்காண்- வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்’’-
ஈயக்கொழுந்து, தூதுவளை, சங்கன் இலை, திப்பிலி, கண்டங்கத்தரி, இவற்றை சம அளவாக எடுத்துக்கொண்டு சிறிதளவு சுக்குசேர்த்து சரக்கின் அளவிற்கு எட்டுபங்கு தண்ணீரில் அதை போட்டு காய்ச்சி 1லிட்டராக சுண்டிய பிறகு எடுத்து வைத்து கொண்டு அதை காலை மாலை 50 மிலி வீதம் குடித்து வந்தால் எந்த வகையான இருமல் நோயும் 3 நாளில் முற்றிலும் நீங்கும். சிலருக்கு நடந்தாலோ அல்லது பேசினாலே மூச்சுவாங்கும். இவர்கள் இண்டம்வேர், தூதுவேளை வேர் இரண்டும் தலா 2கிராம் எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக்காய்ச்சி அதில் 100 மிலி வீதம் காலை மாலை குடித்துவர இரைப்பு தீரும்.
முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை, முதலியவை ஏற்பட்டால் இண்டம் கொடியை துண்டித்தால் வரும் ரசத்தை 2 துளி அளவில் மூக்கில் விட குணம் ஏற்படும். இந்த ரசத்தை தீப்புண் மீது தடவிவந்தால் அவை விரைவில் குணமாகும்.இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு தலா 20 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில்போட்டு கால்லிட்டராக காய்ச்சி எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் 100 மிலி வீதம் எடுத்து காலை மாலை குடித்து வந்தால் பல்வேறு காரணங்களால் ஏற்படும் அனைத்து இருமலும் நீங்கும்.என்கின்றார் அகத்தியர்.
இண்டிலை துதுளை யிசங்கு திப்பிலி
கண்டரி சுக்குடன் கலந்து வெந்த நீர்
உண்டி டலொருதர மிரும லுந்றிடில்
தெண்டமுற் தருவன்யான் தேரணு மல்லனே’’-
என்கின்றார் தேரையர். சாலையின் ஓரத்தில், வயல்வெளியில் என்னவென்றே தெரியாத நிலையில் வேலியில் படர்ந்து கிடக்கும் முட்கள் நிரம்பிய ஒரு கொடியினம்.
மனிதர்களுக்கு கபத்தால் ஏற்படுக்கூடிய கொடிய நோயை தீர்த்து நம்மை வாழ வைக்கும் என்பதை அறிந்து, நமக்கு அளித்த முன்னோர்கள் வழியில், பெரியவர்களின் துணைக்கொண்டு, அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...