Oct 9, 2012

அதிவேக பயணிகள் விமானத்தில் பயணம் செல்ல தயாராகிவிட்டீர்களா?


2003 மே 21ம் திகதி கொன்கோர்ட் (Concorde) விமானமானது தனது இறுதிப்பறப்பினை நியூயோர்க் நகரத்திலிருந்து பாரிஸ் நகரத்தை நோக்கி 2500km/h(1553mph) க்கும் அதிகமான வேகத்தில் 4 மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரத்தினை எடுத்துக்கொண்டது. 27வருடங்களாக வான்பரப்பில் பறப்பினை மேற்கொண்ட இந்த அழகிய Franco - British பறவை என வர்ணிக்கப்படும் இந்த கொன்கோர்ட்டானது நீண்டதூர விமானப்போக்குவரத்து உயர்சந்தையில் நிரந்தரமாக கூடு கட்டத் தவறிவிட்டது.







பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்.....

அண்டவெளியிலிருந்து பூமியில் விழுந்து கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்லாக "ஹோவா விண்கல்" விளங்குகின்றது.


1920ம் ஆண்டு நமீபிய நாட்டின்(அக்காலகட்டத்தில் தென் மேற்கு ஆபிரிக்கா என்றழைக்கப்பட்டது) வடபகுதியில் குரூட்ஃபொன்ரெய்ன் பகுதியினைச் சேர்ந்த ஜே.பிரிட்ஸ் என்கின்ற விவசாயி தனது நிலத்தினை விவசாய செய்கைபண்ண உழுதபோது நிலத்தில் புதையுண்டிருந்தநிலையில் பிரமாண்டமான கல்லொன்று இருப்பதனைக் கண்டுபிடித்தார். இக்கல்லினை ஆய்வுக்குட்படுத்திய விஞ்ஞானிகள் இரும்புத்தாதுக்கள் நிறைந்த விண்கல் என்பதனை உறுதிப்படுத்தினார்கள்.

பிரமாண்டமான நிறையின் காரணமாக இவ்விண்கல்லினை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு நகர்த்தமுடியவில்லை. எனினும் விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் கல்வீச்சு வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்காகவும் இவ்விண்கல்லின் பெரும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விண்கல்லானது 9அடி நீளம், 9அடி அகலம், மற்றும் 3அடி தடிப்பத்தினைக் கொண்டதாகும்.

"ஹோவா வெஸ்ட்" என்கின்ற பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணத்தினால் "ஹோவா விண்கல்" என்றழைக்கப்படுகின்ற இவ்விண்கல்லானது 80000 ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவ்விண்கல்லில், இரும்புத்தாதுக்கள்82.4%,  நிக்கல்16.4%, கோபால்ட்0.76% மற்றும் பொஸ்பரஸ் 0.04%, செம்பு, நாகம், காபன், சல்பர், குரோமியம் , கல்லியம்,  ஜெர்மனியும் ,  இரிடியம்   மூலகங்கள் சிறிதளவும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.


 
ஹோவா விண்கல்லினை கெளரவிக்கும் நமீபிய தபால் முத்திரை

"உலக தபால் தினம்" → ஒக்டோபர் மாதம் 9ம் திகதி



ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" கொண்டாடப்படுகின்றது. உலக தபால் சங்கம் 1874ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைக்கப்பட்ட நிறைவினையொட்டி 1969ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் உலக தபால் சங்க சம்மேளனத்தில் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" என பிரகடனம்செய்யப்பட்டது.
இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தொடர்பாடல் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையானது

Oct 8, 2012

மாணவரின் மொபைல்போன் தொழில்நுட்ப ஆய்வுப் பணிக்குப் பரிசு

உலகிலேயே மிகவும் வயதான பெண் காலமானார்

உலகிலேயே மிகவும் வயதானவராகக் கருதப்பட்ட 132 வயது மூதாட்டி, ஜார்ஜியாவில் காலமானார்.
 முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுள் ஒன்றான ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் அண்டிசா க்விசாவா. அவர் வைத்திருந்த ஆவணங்களில் கடந்த 1880ஆம் ஆண்டு ஜூலை 8-ல் அவர் பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் ஏற்கெனவே எழுப்பப்பட்டன. ஆவணங்களில் இருப்பது அவரது சரியான பிறந்த நாள்தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஜார்ஜியாவின் தொலைதூர மலைக் கிராமமான சாச்சினோவில் வசித்த அவர் தேயிலை பறிப்பவராக வேலை பார்த்து வந்தார். இந்தப் பணியில் இருந்து 1965ஆம் ஆண்டு ஓய்வு பெற்றபோது ஆண்டிசாவுக்கு வயது 85 என்று கூறப்பட்டது.
 அவருக்கு 12 பேரக் குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக் குழந்தைகளும்

பிரிட்டன், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஜான் கர்டன், ஷின்யா யமனாகா

ஜான் கர்டன், ஷின்யா யமனாகா ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்காக பிரிட்டனைச் சேர்ந்த ஜான் கர்டனுக்கும், ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனாகாவுக்கும் இந்த ஆண்டுக்கான, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 ÷மருத்துவம், இயற்பியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம், வேதியியில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சேவையாற்றும் நிபுணர்களுக்கு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த நோபல் பரிசுக் குழு ஆண்டுதோறும் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல்

கம்ப்யூட்டரை அசெம்பிள் செய்வது எப்படி












உலக சனத்தொகை 7 பில்லியன், அதில் ஒரு பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மகிழ்ச்சியில் சூக்கர் பேர்க்

உலக சனத்தொகை 7 பில்லியன், அதில் ஒரு பில்லியன் மக்கள் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்; மகிழ்ச்சியில் சூக்கர் பேர்க்

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக், ஒரு பில்லியன் பாவணையாளர்களை கடந்துள்ளது.2004ம் ஆண்டு மார்க் சூக்கர் பேர்க்கரினால் ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் இத்தளம், தற்போது, 1.13 டிரில்லியன் லைக்ஸ், 219 பில்லியன் புகைப்படங்கள், 17 மில்லியன் அங்கத்துவர்களின் இட விபரம் என்பவற்றை கொண்டிருக்கிறது.
எனக்கும், எனது சிறிய குழுவினருக்கும் உங்களுக்கு சேவை செய்ய நீங்கள் கொடுக்கும் உயர்ந்த கௌரவத்திற்கு மிக்க நன்றி என இந்நாளில் சூக்கர் பேர்க் தனது பேஸ்புக் ஸ்டேடஸில் அப்டேட் செய்துள்ளார்
குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன.

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில்

எமது உடலிற்கு கிருமி நாசினியாக தொழிற்படுகிறது மஞ்சள்

எமது உடலிற்கு கிருமி நாசினியாக தொழிற்படுகிறது மஞ்சள்

நாம் ஏன் உணவில் கொஞ்சமேனும் மஞ்சள் சேர்த்துக்கொள்ள வேண்டும். மஞ்சளின் மகத்துவ குணங்கள் எம்மில் எத்தனை பேர் தெரிந்துவைத்திருக்கிறோம். இதோ இன்றைய மூலிகை பகுதியில் மஞ்சளை பற்றி சிறிது அலசுவோம். மஞ்சளுக்கு பல மருத்துவ குணங்கள் உண்டு. அதில் மிக சிறப்பானது மஞ்சள் கிருமி நாசினியாக பயன்படுவது.
வயிற்றின் உள்ளே உள்ள கிருமிகளை விரட்டுவதில் மஞ்சளுக்கு நிகர் மஞ்சள்தான். சிறு குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை, வேப்பங் கொழுந்துடன் வாரா வாரம் ஒரு முறை அரைத்துக் கொடுத்தால், வயிற்றில் பூச்சிகள் இருக்காது.
மேலும் சிறு குழந்தைகளுக்கு வரும் சளி, இருமலுக்கு பாலைக் கொதிக்க வைத்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு, சர்க்கரை சேர்த்து குடிக்கக் கொடுத்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. வறட்டு இருமல், மற்றும் சளி இருமலால் இரவில் தூங்காமல் அவதிப் படுவோரும் பாலில் மஞ்சள் தூளைப் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இருமல் உடனே நின்றுவிடும்.
மஞ்சள் ஜீரணத்துக்கு உதவும் மருந்து கூட. நாம் அன்றாடம் செய்யும் சாம்பார், ரசம் இவைகளில் மஞ்சள் தூளை சேர்த்து விட்டு, அதனுடன் கூடவே பொரித்த சிப்ஸ், வடை, அப்பளம் என்றெல்லாம் காம்பினேசனில் சாப்பிட்டால் உணவு உடனே ஜீரணமாகிவிடும்.
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் மிளகாய் பொடி, அத்தனை நல்லதல்ல. ஆனால், அதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து சாம்பார் பொடி தயாரிக்கும் போது, மிளகின் கெட்டத் தன்மையை மஞ்சள் தூள் முறியடித்து விடும். மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது புற்று நோய்கூட அண்டாது.
இந்தியாவில் பல புற்றுநோய் வகைகள் இருந்தாலும் சருமம், பெருங்குடல் புற்று நோய் கொஞ்சம் குறைவாக இருப்பது நாம் அன்றாடம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால்தான்.
விரலி மஞ்சளில் இருக்கும் குர்குமின் சத்தில் உள்ள பாலிபீனால்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைக் குறைப்பதிலும், நோய் வராமல் தடுப்பதிலும் பெரும் பங்கு அளிக்கின்றன என்று ஆய்வில் கண்டு பிடித்துள்ளார்கள்.
மஞ்சள் வயோதிகத்தில் வரும் நினைவுத் தடுமாற்ற நோய், கீமோதெரபி தரும்போது ஏற்படும் பக்க விளைவுகள் இவற்றை தடுக்கின்றது. சிறு வயது முதலே பெண் குழந்தைகள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்து வந்தால், முகம் பொன்னென மின்னும். முகத்தில் தேவையற்ற முடிகள் வளராது.
மஞ்சளில் உள்ள குர்குமின் சத்து புற்றுநோய் அண்டவிடாமல் தடுக்கும். ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தைக் குறைக்கும். உடலில் உள்ள உள் மற்றும் வெளிக் காயங்களை ஆற்றும், வீக்கத்தைக் குறைக்கும்.
அசைவ சாப்பாட்டில் மஞ்சள் சேர்த்து சமைத்தால் விரைவில் ஜீரணமாகும். தவிர மஞ்சள் கிருமி நாசினி என்பதால் இறைச்சியில் ஏதும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும்.
மஞ்சள் ஒரு தடுப்பு மருந்து, வாசனையூட்டி, ஒரு வலி நிவாரணி, ஒரு இணை மருந்து என்று சொல்லிக் கொண்டே போகலாம். மஞ்சளை உணவில் பயன்படுத்துங்கள், பயன் பெறுங்கள்!

வட கொரியாவை தாக்க அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது தென் கொரியா



அமெரிக்காவின் உதவியுடன் வட கொரியா முழுமையும் சென்று தாக்கும் வகையில் தன் ஏவுகணை திறனை மும்மடங்கு அதிகரிக்கவுள்ளது தென் கொரியா.அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தத்தின்படி, 800 கிலோமீற்றர் தொலைவு சென்று தாக்கும் வகையில் ஏவுகணைகளை தென் கொரியா தயாரிக்கவுள்ளது.
தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுன் யுங்-வூ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், வடகொரியாவின் இராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதத்தில் இந்த சீரமைப்பு மேற்கொள்ளப்பட

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...