Jan 30, 2013

பெப்ரவரி 15இல் அதிவேக விண்கல் பூமியை மிக அருகே கடந்து செல்லும்!





images47.jpgஎதிர்வரும் பெப்ரவரி 15ம் திகதி ஒரு அதிவேக விண்கல் பூமியை மிக அருகே கடந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 DA14 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல் பூமிக்கு சுமார் 25,500 கி.மீ. தூரத்தில் வரவுள்ளது. 143,000 டன் எடையும் 148 அடி நீளமும் கொண்ட இந்த விண்கல் ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவில் பாதியளவுக்கு உள்ளது
.
25,000 கி.மீ. தூரம் என்ன ரொம்ப பக்கமா என்று கேள்வி கேட்கலாம். அண்டவெளியின் விஸ்தீரணத்தை நாம் உணர்ந்தால் இது எவ்வளவு சிறிய இடைவெளி என்பது புரியும்.
நமது தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் தான் பறந்து கொண்டுள்ளன. இந்த செயற்கைக் கோள்களைவிடப் பக்கமாக பூமியை நெருங்கிச் செல்லப் போகிறது இந்த விண்கல்.

1908ம் ஆண்டு இதே போன்ற ஒரு விண்கல் தான் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விழுந்து பல்லாயிரம் சதுர கி.மீ. பரப்புள்ள வனப் பகுதியை தரைமட்டமாக்கிவிட்டு, பேரழிவை ஏற்படுத்திவிட்டுப் போனது என்பது நினைவுகூறத்தக்கது என்கிறார் நாஸா அமைப்பின் விண்கல் எக்ஸ்பர்ட்டான டோன் இயோமேன்ஸ்.

“Tunguska Event” என்று அழைக்கப்படும் இந்த விண்கல் தாக்குதலால் சைபீரியாவின் அந்தப் பகுதி இன்னும் பனி படர்ந்து கிடக்கும் வெறும் தரையாகவே உள்ளது. அங்கு இன்னும் புல், பூண்டு முளைக்கவில்லை.

ஆனால், இந்த 2012 DA14 விண்கல் நம்மை எட்டிப் பார்த்துவிட்டுப் போகப் போகிறதே தவிர, பூமியில் மோதப் போவதில்லை என்று நாஸா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

விட்டமின் ஈ அதிகம் உள்ள 10 உணவுகள்!



  • 14
     
விட்டமின் ஈவைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது. இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில்

அல்கஹோல் உள்ளெடுப்பதால் ஏற்படும் 5 வகையான பாதிப்புக்கள்!




  • 39
     
Beer splash in shape of heart isolated on whiteஇன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.
ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது. ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின்

Jan 29, 2013

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் மிதக்கும் மாகாணங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013
அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சூறாவளி மற்றும் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதுடன், வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனையடுத்து குயின்ஸ் லேன்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க 20க்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் உயிர்ச்சேதம், பொருட்சேதம் குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

பிரபலமான சமூக வலைத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்தது கூகுள் பிளஸ்




[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013,
இணையத்தள வளர்ச்சியின் பயனாக உருவான சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றன. இதனால் காலத்திற்கு காலம் பல்வேறு புதிய சமூகவலைத்தளங்கள் உருவெடுத்து வருகின்றன.இவ்வாறு தோன்றிய கூகுளின் கூகுள் பிளஸ் சமூகவலைத்தளமானது தற்போது இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது.
லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இணையத்தளங்களுக்கான ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படியே கூகுள் பிளஸ் ஆனது உலகின் பிரபல்யமான சமூகவலைத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களுடன் பேஸ்புக் தளமானது தொடர்ந்தும் முன்நிலையில் காணப்படுவதுடன், வீடியோக்களை பகிரும் வலைத்தளமாகிய YouTube ஆனது Twitter சமூக வலைத்தளத்தினை

Jan 28, 2013

MS Power Point மென்பொருளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒன்லைன் சேவைகள்!Top News


News Service Presentation என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது PowerPoint தான். ஆனால் அதை விரும்பாதவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் சில மாற்று மென்பொருட்களை விரும்புவார்கள். அத்தகையவர்கள் பயன்படுத்த சில மென்பொருட்களை காண்போம்.
Prezi
ஆன்லைன் மூலம் Presentation உருவாக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தளம். உதாரணமாக நாம் ஒரு மேப் போன்றவற்றை விளக்கும் போது, மேப்பை முதலில் மொத்தமாகவும், பின்பு அடுத்த Slide - களில் அதன் பகுதிகளை காட்டுவோம், இதில் அவ்வாறு இல்லாமல் ஒரே Slide - இல் Zoom in, Zoom out வசதிகள் உள்ளன. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
  
SlideRocket
ஆன்லைன் மார்க்கெட்டிங் Presentation , ஒரு தளம் குறித்த Presentation போன்றவற்றை உருவாக்க இது ஒரு சிறந்த தளம். Twitter, Facebook, YouTube போன்ற Plugin வசதிகள் உட்பட பல வசதிகளை இது கொண்டுள்ளது.
Google Docs Presentation (Google Drive)
MS PowerPoint போன்று எளிதாக வேண்டும் என்பவர்களின் சாய்ஸ் இது தான். மிக எளிதாக செய்ய வேண்டும் என்பவர்கள் இதில் முயற்சி செய்யலாம்.


கைவிரல் நகங்களைப்போன்றே கால்விரல் நகங்களும் கவர்ச்சியானதாக விளங்க கடைப்பிடிக்கவேண்டியவை...

News Service கைவிரல் நகங்களைப் போல போலவே கால்விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பாதங்களை அழகு படுத்த அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய் யப்படுகிறது. இதற்கு அதிகம் செல வழிக்க வேண்டியிருக்கும். ஆனால் வீட்டிலேயே நகத்தை அழகுபடு த்த ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன். கைவிரல் நகங்களுக்கு காட்டும் அக்கறையை பெரும்பாலோ னோர் பாத விரல் நகங்களுக்கு காட்டுவதில்லை. இதற்கு காரணம் அது யார் கண்ணிலும் படாமல் மறைவாக இருப்பதுதான்.
அதிகம் வளர்ந்தால் ஆபத்து :பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர் த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். எனவே விரலை தாண்டி வளர்ந் தாலே அவற்றை வெட்டி ஷேப் செய்துவிட வேண்டும். இல் லையெ னில் சதையில் குத்தி காயம் ஏற்படுத்திவிடும்.
  
கால் நகங்கள் அதிக கடினத் தன்மையுடன் இருக்கும் அவற் றை எளி தில் வெட்ட முடியாது. நகத்தை வெட்டுவத ற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்

சூப்பர் ஸ்டார் ரஜினியை சிறப்பு விருந்தினராக வருமாறு அமெரிக்க அரசு அழைப்பு


News Service சூப்பர் ஸ்டார் ரஜினியை தங்கள் அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் நூற்றாண்டுக்கொரு முறை வரும் 12.12.12 என்ற அபூர்வ தேதியில் அமைந்துள்ளதற்கு, மேரிலான்ட் மாகாண கவர்னர் 'திரு மார்ட்டின் ஓமாலி' அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, டாக்டர் ராஜன் வாசித்து அளித்தார். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கவர்னர் மார்ட்டின் ஓமாலி தனது வாழ்த்துரையில், 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' அவர்களுக்கு, நீங்கள் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்ட காலம் வெற்றிகரமாக திகழ்வது

சீன ராணுவம் தயாரித்திருக்கும் மிகப்பெரிய சரக்கு விமானம்


 சீன ராணுவம் தயாரித்திருக்கும் மிகப்பெரிய சரக்கு விமானம்பெய்ஜிங்,ஜன.28 (டி.என்.எஸ்) அமெரிக்கா, ரஷியாவை தொடர்ந்து சீன ராணுவம் மிகப்பெரிய சரக்கு விமானம் ஒன்றை தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் ராணுவம, அதிக எடையுள்ள ராணுவ டாங்கிகள் மற்றும் உபகரணங்களை எடுத்துச் செல்வதற்காக மிகப்பெரிய சரக்கு விமானங்களை வைத்துள்ளன. இந்த நாடுகளின் வரிசையில் தற்போது சீனாவும், இதுபோன்ற சக்தி கொண்ட மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளது.

66 டன் எடையுடன் 13 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய திறன் கொண்ட இந்த விமானத்தின் என்ஜின் ரஷியாவின் நவீன தொழில் நுட்பத்துடனுடம், உதிரி பாகங்கள் சீன தொழில் நுட்பத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒய்-20 என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஷான்ஸி மாகாணத்தின் யங்லியாசா விமான நிலையத்தில் நடந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் மூலம் இந்திய எல்லையில் மிக உயரமான மலைப்பகுதியில் உள்ள திபெத்துக்கு ராணுவ தளவாடங்களை எடுத்து செல்ல முடியும். தற்போது சென்சாகு தீவு பிரச்சினையில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே சீனாவுக்கு பிரச்சினை உள்ளது.

அதை சமாளிக்கும் விதமாக இந்த அதிநவீன சரக்கு விமானத்தை சீன ராணுவம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. (டி.என்.எஸ்)

பிரேசில் இரவு விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு

பிரேசில் இரவு விடுதியில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரிப்பு
பிரேசிலியா, ஜன.28-
 
பிரேசில் நாட்டின் சாண்டா மரியா நகரில் 'கிஸ் நைட் கிளப்' என்ற இரவு விடுதி உள்ளது. இங்கு விடுமுறை தினமான நேற்று இரவு பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் விடுதியில் திரண்டு உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். அப்போது அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், மீட்புக்குழுவினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
 
தீ விபத்து ஏற்பட்ட மிகப்பெரிய ஹாலில் ஜன்னல் எதுவும் இல்லாததால்,

போப்பாண்டவரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புறா! Photos

pope-s-dove-peace-almost-ends-pieces-1





  • 7
     

வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்து விக்கித்து நின்றனர். சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா.
ஆனால் இந்த சமாதானப் புறாவை கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று. போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார். அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்து போப்பாண்டவர் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கடும் வேதனையில் துடித்தபடி புறா சீகல்லிடமிருந்து தப்பித்து ஓடிப் பறந்ததைப்பார்த்து கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். புறாவை சரமாரியாக கடித்துக் குதறிய பின்னர் அந்த சீகல் பறவை அங்கிருந்து பறந்தோடி விட்டது.
இத்தனைக்கும் ரோம் நகரிலிருந்து வந்த 2000 இளைஞர்கள் நடத்திய அமைதிப் பேரணி போப்பாண்டவர் உரை நிகழ்த்திய செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் நேற்று முடிவடைந்தது. இதன் அறிகுறியாகவே புறாவைப் பறக்க விட்டார் போப்பாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
pope-s-dove-peace-almost-ends-pieces-2

pope-s-dove-peace-almost-ends-pieces-3
pope-s-dove-peace-almost-ends-pieces-4

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...