Feb 8, 2013

இணைய பயன்பாட்டில் நொக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது அப்பிள்!

News Service உலகம் முழுவதும் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்துவது அடிப்படையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்தியதில் நோக்கியா நிறுவன தயாரிப்புகள் 37.67 சதவீத இடத்துடன் முதலிடத்தில் இருந்ததாக ஸ்டாட் கவுன்டர் (StatCounter) என்ற இணைய தள ஆய்வு நிறுவன புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. அதை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளி, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.ஜனவரி நிலவரப்படி உலக அளவில் இணைய தள பயன்பாட்டில் 25.86 சதவீதத்துடன் ஆப்பிள் முதலிடத்தில் இருப்பதாக தெரிய

பூமியின் தோற்றத்தை விண்வெளியிலிருந்து புகைப்படம் எடுத்து அனுப்பிய விண்வெளிவீரர்!

News Service பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மைல் தொலைவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருக்கும் விண்வெளிவீரரொருவர் பூமியின் மேற்பரப்பை படமெடுத்து அனுப்பியுள்ளார். தற்போது டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கனேடிய விண்வெளி வீரரான கிறிஸ் ஹெட்பீல்ட் தனது மகனுக்கு இப் படங்களை அனுப்பியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினை பராமரிக்கும் மகன் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
  

81வது சதம்! 25,000 ரன்கள் சச்சின் புதிய சாதனை

வெள்ளி, 8 பிப்ரவரி 2013

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் நடைபெற்று வரும் இரானி கோப்பைக்கான 5 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சற்று முன் சதம் எடுத்தார். அவரது 81வது சதமாகும் இது! சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் சச்சின்.

முதல் தர கிரிக்கெட்டில் 303வது போட்டியில் ஆடும் சச்சின் 25,001 எடுத்து மற்றொரு சாதனை புரிந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.

139 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் எடுத்த சச்சின் தற்போது 106 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் சவான் 40 ரன்களில் விளையாடி வருகிறார்.

526 ரன்களைத் துரத்தி வரும் மும்பை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மாவை 0-வில் ஹர்பஜன் சிங் வீழ்த்தினார், ஏற்கனவே ரகானேயை வீழ்த்தி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கேப்டன் ஹர்பஜன் சிங்.

பாண்டே 2, ஹர்பஜன் 2, ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். அபிமன்யு மிதுன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
மேலும் படிக்க

Feb 7, 2013

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!

papayaசாதாரணமாக அனைவரும் ஒதுக்கும் அல்லது பெரிதாக அனைவராலும் விரும்பப்படாத பப்பாளி பழத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்

Feb 6, 2013

ஏர்செல்லுடன் கைகோர்த்தது பேஸ்புக்



வாய்ஸ் அப்டேட்டிற்காக, ஏர்செல்லுடன் நிறுவனத்துடன் பேஸ்புக் கைகோர்த்துள்ளது. சமுகவலை இணைதளங்களில் ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக், இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுள் ஒன்றான ஏர்செல்லுடன் இணைந்து வாய்ஸ் அப்டேட்டை வழங்குகிறது.

இதுகுறித்து, ஏர்செல் நிறுவன உயர் அதிகாரி குர்தீப் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதன்படி, ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் ‌மொபைல்போனில் வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் தங்களது குரலை பதிவு செய்து, பேஸ்புக்கில் அப்டேட் செய்தால், இந்த பதிவு, எஸ்எம்எஸ் மூலம், அவருடைய பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அவர்களும், இதே முறையில் அவருக்கு பதிலளிக்கலாம். இந்த சேவைக்கு இண்டர்நெட் பயன்பாடு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், பேஸ்புக்கில் சங்கமித்துள்ள நிலையில், இந்த கைகோர்ப்பு தங்கள் நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தும் என்பதில் ‌யாதொரு சந்தேகமுமில்லை என்று ‌அவர் ‌அதில் தெரிவித்துள்ளார்.


Read more: http://therinjikko.blogspot.com/2011/02/blog-post_02.html#ixzz2K8ovtUzN

விண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)



UEFI என்பதனை United Extensible Firmware Interface என விரிக்கலாம். கம்ப்யூட்டர் ஒன்றின் இயக்கத் தொடக்க நிலைகளில் ஒன்று என இதனைக் கூறலாம். 

பூட் அல்லது பூட்டிங் என்று சொல்லப்படுகிற, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் நிலை என்பது, கம்ப்யூட்டர் இயங்குவதற்கென வரிசையாக மேற்கொள்ளப்படுகிற செயல்பாடுகளாகும். பவர் பட்டன் அழுத்தி, கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு நாம் அதன் முன் அமர்ந்து கொள்கிறோம். 

ஸ்டார்ட் ஸ்கிரீன் வரும் முன், கம்ப்யூட்டரின் பூட் இயக்கம் நமக்குப் பல திரைகளைக் காட்டுகிறது. இதில் பல தொழில் நுட்ப தகவல்கள் காட்டப்படுகின்றன. இவற்றில் பல நமக்குப் புரியாத, பெரும்பாலான நேரங்களில் தேவைப்படாத தகவல்களாகவே இருக்கின்றன. 

இதற்குச் சிறிது நேரத்திற்குப் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் கம்ப்யூட்டரில்

Feb 4, 2013

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரியவந்துள்ளது. சுமார் 50 மீற்றர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லூக்கு 2012 டி14 என்று பெயரிட்டுள்ளனர்.
அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீற்றர் தூரத்தில் உள்ளபோதும் இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லூக்கும் இடையே மிக குறைவானது என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது என்றும் வருகிற 15ம் திகதி அது பூமியை கடந்து செல்கிறது எனவும் நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908ம் ஆண்டு பூமியை தாக்கியது. ரஷ்யாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்த இந்த விண்கல்லால் பல நூறு சதுர கி.மீற்றர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு கோடீஸ்வரர்களுக்காக சுவிஸ் வங்கிகளில் புதிதாக பெட்டகவசதி!

News Service
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களுக்காக, தங்கக் கட்டிகள், அதிக மதிப்புடைய சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஆகியவற்றை சேமிப்பதற்கான பெட்டக வசதி உள்பட சிறப்பு கணக்கு சேவையை தொடங்கி உள்ளன. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார பேரவையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிஸ் வங்கிகள் இந்தத் தகவலை தெரிவித்தன.
தங்கக் கணக்கு மற்றும் வைரம், 1,000 சுவிஸ் ஃபிராங்க் கரன்சி ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை சேமிப்பதற்கான பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், அதற்கான கட்டணங்களை இவ்வங்கிகள் கணிசமாக உயர்த்தி உள்ளன. இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினரின் கறுப்புப் பணத்துக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் அடைக்கலம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வங்கிகளில் இந்தியர்கள் மட்டும் பல லட்சம் கோடி முதலீடு செய்திருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் ரகசியக் கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியர்கள் ரூ.12,800 கோடி முதலீடு செய்திருப்பதாக சுவிட்சர்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. சேமிப்புக் கணக்கில் உள்ள முதலீடு தொடர்பான விவரங்களை மட்டுமே கேட்டுப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன. இந்த ஒப்பந்தங்களின்படி, பாதுகாப்புப் பெட்டக விவரங்களை கேட்க முடியாது என்பதால், இத்தகைய புதிய சேவையைத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

300 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞானி நியூட்டன் எழுதிய புத்தகங்கள்!

News Service
விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள் 300 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் கிடைத்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதை கண்டுபிடித்தவர். ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு என்பது உள்பட இயக்கம் தொடர்பான விதிகளை (லா ஆப் மோஷன்) கூறியவர். இயற்பியல் மட்டுமின்றி கணக்கு, வானியல், பொருளாதாரம் ஆகிய துறைகளிலும் வல்லுனராக திகழ்ந்தவர். இங்கிலாந்தில் கி.பி. 1642-ல் பிறந்த இவர் 1727-ல் இறந்தார்.
 
தன் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் கோட்பாடுகள் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தின் ஸ்டபோர்டுஷயர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் வில் கார்சைடு (16) என்ற மாணவன் ஈடுபட்டிருந்தான். அப்போது லைம் என்ற பள்ளி வளாகத்தின் ஆய்வுக்கூடத்தில் ஒரு பீரோவில் தூசி படிந்த நிலையில் ஒரு பெட்டி இருப்பதை அவன் கண்டுபிடித்தான். அந்த பெட்டியில் 3 புத்தகங்கள் இருந்தன. அவை லத்தீன் மொழியில் ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகங்கள்.
பிலாசபி நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேடிகா என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த புத்தகம் மூன்று பாகங்களாக உள்ளன. 1687-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டவை. அந்த புத்தகங்களில் புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகள் தொடர்பாக ஏறக்குறைய 1000 பக்கங்களுக்கு நியூட்டன் எழுதியுள்ளார். அந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக 1874-ல் இருந்த பிரான்சிஸ் எலியன் கிச்சனர் என்பவர் அந்த புத்தகங்களை வைத்திருந்திருக்கலாம் என தெரிகிறது. புத்தகங்கள் வரலாற்று பெருமை வாய்ந்தவை என்பதால் அவற்றை விற்கப் போவதில்லை என்று பள்ளி நிர்வாகி ஜூலி கூறியுள்ளார்

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்!

News Service
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து விண்வெளியை ராடார்களின் மூலம் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி பறந்து வருவது தெரிந்தது. சுமார் 50 மீட்டர் அகலம் கொண்ட அந்த ராட்சத விண்கல்லுக்கு 2012 டி14 என பெயரிட்டுள்ளனர். அக்கல் தற்போது பூமியில் இருந்து 27,680 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த தூரம் பூமிக்கும் ராட்சத விண்கல்லுக்கும் இடையே மிக குறைவானது என கணிக்கப்பட்டுள்ளது.
  
இந்த விண்கல் நிச்சயம் பூமியை தாக்காது. வருகிற 15-ந்தேதி அது பூமியை கடந்து செல்கிறது. இந்த தகவலை நாசா விஞ்ஞானி டான் யியோ மான்ஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு ராட்சத விண்கல் கடந்த 1908-ம் ஆண்டு பூமியை தாக்கியது. அப்போது அது ரஷியாவின் சைபீரியாவில் வனப்பகுதியில் விழுந்தது. இதனால் பல நூறு சதுர கி.மீட்டர் தூரத்துக்கு பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...