Jul 22, 2013

ஆந்திராவை புரட்டிப்போட்டது கனமழை 300 கிராமங்கள் தத்தளிப்பு 294 ஏரிகள் உடைப்பு


சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கம்மம், கரீம்நகர், வாரங்கள், ஆதிலாபாத், நிஜாமாபாத், கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 294 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர்.கோதாவரி மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், இப்பகுதியில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.கம்மம் மாவட்டம் பத்ராச்சலம் பகுதியில் 140 கிராமங்களுக்கான சாலைகள் மழைநீரில் சேதமடைந்துள்ளதால், அப்பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

300க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.கோதாவரி மாவட்டங்களில் நதிக்கரை ஓரம் தாழ்வான பகுதியில் உள்ள 70 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் தங்குவதற்கு இடமின்றியும், உணவு கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேற்கு கோதாவரி

சனிக்கிரகத்தில் இருந்து போட்டோ எடுத்த 'கஸ்சினி



சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த 'கஸ்சினி' விண்கலம்.


 நியூயார்க்,ஜூலை. 23 - சனிக்கிரகத்தில் இருக்கும் கஸ்சினி விண்கலம் மூலம் பூமியில் இருக்கும் மக்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் லாஸ் ஏஞ்சல் மக்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதில், சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்க இருப்பதாகவும், அதில் பொதுமக்களும் கலந்துக்கொண்டு வானை நோக்கி கை அசைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கிணங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்சில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கூடி, விண்ணில் கஸ்சினி விண்கலம் இருக்கும் திசையை நோக்கி கையசைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை


ஆண் குழந்தை --- கேட் , வில்லியம் தம்பதியர் ( ஆவணப்படம்)
இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.
15 காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.

குழந்தை பிறந்தது பற்றிய அறிவிப்பு --பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே
பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.
கேட் அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் மருத்துவமனைக்கு வெளியே பெருந்திரளான கூட்டம் கூடியிருந்தது.

20,000 வீடுகள் தரைமட்டம் சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான 2 நிலநடுக்கங்களில் 90 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 20,000 வீடுகள் தரைமட்டமாகின. இடிபாடுகளை அகற்ற, அகற்ற சடலங்கள் வந்து கொண்டிருப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.சீனாவின் கன்சு மாகாணத்தில் நேற்று காலை 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்மேற்கு பகுதியில் உள்ள இந்த மாகாணத்தில் மலைப்பகுதி, பாலைவனம், சமவெளி என்று கலவையான நிலப்பரப்பு உள்ளது. காலை 7.45 மணிக்கும், அதைத் தொடர்ந்து 9.12 மணிக்கும் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால், மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டிங்சி, மாகாணத்தின் தலைநகர் லான்ஜோ ஆகியவற்றில் கட்டிடங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் சரிந்து

ஆஸ்ட்ரியாவில் கருணாநிதிக்கு தபால்தலை


திங்கள், 22 ஜூலை 2013

திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம்.

இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.

அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும்.

தனிப்பட்ட முறையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டாலும் இதை அங்குள்ள தபால்களில் பயன்படுத்த முடியும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்


கொழுப்பை குறைக்கும் உணவுகள். திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.
கொழுப்பை குறைக்கும் உணவுகள்கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு

how get clean acne free face தற்போது முகப்பரு தொல்லைகளால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதற்கு எந்த மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டாலும், சரியான தீர்வு கிடைப்பதில்லை. எனவே பலர் இத்தகைய பருக்களை போக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களை விட, இயற்கை முறைகளையே நாடுகின்றனர். அத்தகையவர்களுக்காக சிறப்பான தோற்றம் அளிக்கும் சருமத்தைப் பெற இந்த கட்டுரை வழிகாட்டும். ஆகவே எதிர்பார்த்து வரும் பளிங்கு போன்ற முகத்தோற்றம் பெற பின்வரும் வழிகளை கடைப்பிடித்து வாருங்கள். how get clean acne free face வழிகள்: 1. சாலிசிலிக் அமிலம் அடங்கிய திரவத்தைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் இந்த அமிலம் முகப்பருவிலிருந்து விடுதலை பெற பெரும் உதவி புரியும். 2. ஆப்ரிகாட் பழத்தை வைத்து முகத்தை ஸ்கரப் செய்தால், அது இறந்த செல்களை நீக்கி சிறந்த முகத்தோற்றத்தை தரும். 3. க்ரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்தாலும் முகம் சிவத்தலையும், தோல் உடைதலையும் தவிர்க்கலாம். 4. வெள்ளரிக்காயை

இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்





இந்தியாவில் தெய்வ நம்பிக்கைகள் அதிகம் உள்ளன. அதற்கேற்றாற் போல் கோவில்களும் நிறைய உள்ளன. அதுவும் தெருவோரத்தில், மரத்தின் அடியில், ஏன் எங்கு திரும்பினாலும் சிறு கோவில்களை காணலாம். ஆனால் அவை அனைத்துமே பிரபலமானதாக இருப்பதில்லை. இருப்பினும் ஒருசில கோவில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷம் போன்றும் இருக்கின்றன. ஏனெனில் அத்தகைய கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது.
எனவே அந்த கோவில்களுக்கு தினமும் நிறைய பேர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அதனால் அந்த கோவில்களுக்கு நிறைய நன்கொடைகளும் வரும். இந்த நன்கொடைகளால் கோவில்களை பலவாறு மேம்படுத்துகின்றனர். இப்போது இந்தியாவின் பொக்கிஷமாக இருக்கும் சில பணக்கார கோவில்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, செல்லாத கோவில்களுக்கு உடனே சென்று வாருங்கள்...






பத்மநாபசுவாமி கோவில்

கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த கோவிலில் பல கோடிக்கணக்கில் பொக்கிஷங்கள் உள்ளது. இது இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே மிகவும் பிரபலமான கோவிலாகும்.






திருமலை திருப்பதி

ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் இரண்டாவது பணக்கார கோவில்களுள் ஒன்று. இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60,000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் இங்கு 650 கோடிக்கும் மேற்பட்ட பொக்கிஷங்கள் உள்ளது. எனவே தான் இந்த கோவில் பணக்கார கோவில்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.






வைஷ்ணவ தேவி கோவில்

இந்த கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள கோவில்களுள் ஒன்றாகும். இங்கு மாதா தேவியின் ஆசியைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இங்கு வருடத்திற்கு 500 கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.






சித்தி விநாயகர் கோவில்

இது மற்றொரு பணக்கார கோவிலாகும். இந்த கோவிலில் நிறைய பாலிவுட் நடிகர், நடிகைகள் விநாயகரின் ஆசியைப் பெற வருவதோடு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு நன்கொடையாக 3.5 கிலோ தங்கத்தை கொல்த்தாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளார். இதனை வைத்து இந்த கோவிலின் குவிமாடம் மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.






ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில்

சீக்கிய யாத்ரீகத்தில் மிகவும் பிரபலமானதாக ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோவில் உள்ளது. இந்த கோவிலின் விதானம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. இதன் மேல் 'ஆதி கிரந்த' (குரு கிரந்த சாஹிப்) விலையுயர்ந்த கற்கள், வைரம் மற்றும் இரத்தினங்களைப் பதித்தார்.




சோம்நாத் கோவில்

பல முறை அழிக்கப்பட்டும், ஜோதிலிங்கம் இன்றும் ஆன்மீக பக்தர்கள் செல்லும் தளங்களுள் ஒன்றாக உள்ளது.





பூரி ஜெகன்னாத்

ஒரிஸ்ஸாவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பூரியில் உள்ள மிகவும் பழமையான கோவில் தான் ஜெகன்னாத். இதுவும் செல்வம் அதிகம் பொங்கும் கோவில்களுள் ஒன்றாகும்.
இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்!!!



காசி விஸ்வநாதர் கோவில்

வாரணாசியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான, பழமையான மற்றும் பணக்கார கோவிலில் காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் பொக்கிஷம் போன்று இருக்கும் 9 பணக்கார கோவில்கள்!!!



மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பணக்கார கோவில்களுள் ஒன்றானது.

Jul 21, 2013

முதுமை காரணமாக இளவரசர் பிலிப்பிற்கு முடிசூட்டி மகிழ்ந்த பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்

முதுமை காரணமாக இளவரசர் பிலிப்பிற்கு முடிசூட்டி மகிழ்ந்த பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்மகன் ஃபிலிப்பின் கரத்தை ஏந்திப் பிடிக்கிறார் மன்னர் ஆல்பர்ட்ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட் (79), முதுமை காரணமாக மன்னர் பட்டத்தை தனது மகன் பிலிப்பிற்கு இன்று சூட்டி வைத்தார்.

ஜனநாயக மரபுகளின்படி 20 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிய மன்னர் இரண்டாம் ஆல்பர்ட், பாராளுமன்றத்தில் மன்னருக்கான தனது அதிகாரங்களை இன்று துறப்பதாக பிரதமர் எல்யோ டி ருப்போ முன்னிலையில் கையொப்பமிட்டார்.

இதனையடுத்து, மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாக புதிய மன்னர் பிலிப் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பெல்ஜியம் நாட்டின் தேசிய தினமான இன்று புதிய மன்னரின் பதவியேற்பு விழா நடைபெற்றதால் பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த ராணுவ அணிவகுப்பையும் புதிய மன்னர் பிலிப் ஏற்றுக் கொண்டார்.

மன்னர் பதவியை துறக்கப்போவதாக இரண்டாம் ஆல்பர்ட் அறிவித்த சுமார் 3 வாரங்களுக்குள் இன்றைய விழா நடைபெற்றதால் அயல்நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மொழிவாரி பிரச்சினைகளால் பிளவுபட்டு கிடக்கும் பெல்ஜியத்தின் பாராளுமன்ற தேர்தலை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு புதிய மன்னர் பிலிப்பை எதிர் நோக்கியுள்ளது.

அத்துடன் டச்சு மொழி பேசும் 60 லட்சம் மக்களுக்கும், பிரெஞ்சு மொழி பேசும் 45 லட்சம் மக்களுக்கும் தன்னாட்சி உரிமையுடன் கூடிய தனி மாநிலங்களை பிரித்து வழங்க வேண்டிய கடமையும் அவருக்காக காத்திருக்கிறது.

பெல்ஜியம் பாராளுமன்ற வாசலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய மன்னருக்கு மகிழ்ச்சியுடன் கரங்களை அசைத்து நல்வாழ்த்துகளை தெரிவித்தனர்
.

GIANT Tsunami super WAVE

கொக்குவில் சாயீதுர்க்கா தேர்த்திருவிழா 21.07.2013

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...