Jul 22, 2013

ஆந்திராவை புரட்டிப்போட்டது கனமழை 300 கிராமங்கள் தத்தளிப்பு 294 ஏரிகள் உடைப்பு


சித்தூர்: ஆந்திர மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கம்மம், கரீம்நகர், வாரங்கள், ஆதிலாபாத், நிஜாமாபாத், கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 294 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர்.கோதாவரி மாவட்டத்தில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. 70 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், இப்பகுதியில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.கம்மம் மாவட்டம் பத்ராச்சலம் பகுதியில் 140 கிராமங்களுக்கான சாலைகள் மழைநீரில் சேதமடைந்துள்ளதால், அப்பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

300க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது.கோதாவரி மாவட்டங்களில் நதிக்கரை ஓரம் தாழ்வான பகுதியில் உள்ள 70 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேர் தங்குவதற்கு இடமின்றியும், உணவு கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேற்கு கோதாவரி

மாவட்டத்தில் பழங்குடியினர் வசிக்கும் 26 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் போக்கு வரத்து முடங்கியது. தொலை தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள் ளது. இங்குள்ள மக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 2 ஆயிரம் பேரை 40 பேர் கொண்ட குழு பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.நிஜாமாபாத் மாவட்டத்தில் 73 ஆயிரத்து 36 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளது. முதல்கட்ட சர்வே நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் 13 ஆயிரத்து 247 ஹெக்டேர் நெற்பயிர்களும், 18 ஆயிரத்து 322 ஹெக்டேர் சோளமும், 541 ஆயிரத்து 247 ஹெக்டேர் சோயா பீன்ஸ் பயிர்களும் முற்றிலும் நாசமடைந்துள்ளது. பத்ராச்சலம் நகர் பகுதியில் உள்ள ராமர் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலை சுற்றி உள்ள கடைகள் அனத்தும் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. வாரங்கள் மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளது.கரீம் நகர் மாவட்டத்தில் 359 கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மகாதேவ் நகர்பூர் மண்டலத்தில் 26 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 542 ஹெக்டேர் பயிர்கள் நாசமடைந்துள்ளது. 4000 வீடுகள் மழை வெள்ளத்தில் சரிந்து விட்டது, 65 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...