Jul 22, 2013

சனிக்கிரகத்தில் இருந்து போட்டோ எடுத்த 'கஸ்சினி



சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த 'கஸ்சினி' விண்கலம்.


 நியூயார்க்,ஜூலை. 23 - சனிக்கிரகத்தில் இருக்கும் கஸ்சினி விண்கலம் மூலம் பூமியில் இருக்கும் மக்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் லாஸ் ஏஞ்சல் மக்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதில், சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்க இருப்பதாகவும், அதில் பொதுமக்களும் கலந்துக்கொண்டு வானை நோக்கி கை அசைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கிணங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்சில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கூடி, விண்ணில் கஸ்சினி விண்கலம் இருக்கும் திசையை நோக்கி கையசைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...