Aug 5, 2013

ஆடி அமாவாசை விரதமும் அதன் சிறப்பும்


ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  06.07.2013 செவ்வாய்க்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது. அன்றைய தினம் பூசம் நட்சத்திரமும் கூடி இருப்பதால் மிகவும் சிறப்பு பொருந்தியதாக ஆகமங்கள் கூறுகின்றது.


நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.
இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி

ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’ -- ஹோமியோபதி மருத்துவம்,


ஹோமியோபதியில் தேவையில்லை ‘பைபாஸ்’
ஜெர்மனியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அலோபதி மருத்துவராக இருந்த சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இது ஊசி, அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ முறையாகும். அறுவை சிகிச்சைத் தவிர்க்கவும் முடியும். 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் கையாளப்பட்டு மிகவும் பிரபலமாகி பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வேரூன்றி, அங்குள்ள மக்களின் நம்பிக்கையை இம்மருத்துவ முறை பெற்றுள்ளது. தமிழகத்திலும் 400க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.
உடல் கூறில் உள்ள குறைகளை மட்டும் கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல், நோயாளியின் மன நிலையையும் கண்டறிந்து ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது இம்மருத்துவ முறையின் சிறப்பாகும். மேலும் ஆரோக்கியமாக உள்ள வருக்கு எது நோயை உருவாக்குகிறதோ, அப்பொருளைக் கொண்டே நோய்வாய்ப்படு பவருக்குச் சிகிச்சை அளிப்பது ஹோமியோபதியின் அடிப்படை உதாரணமாக ஜலதோஷத் துக்குக் காரணமாக இருக்கும் வெங்காயத்தைக் கொண்டு ஹோமியோபதி முறையில் மருந்து தயாரித்துக் கொடுத்தால் ஜலதோஷத்துக்குச் சிறந்த மருந்தாக இருக்கும்.
அறிவியல்பூர்வமாக ... நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் உள்ள எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், ஈசிஜி போன்ற தேவையான சோதனைகளைச் செய்து நோயின் தன்மையை அறிவியல் பூர்வமாக உறுதி செய்துகொண்ட பிறகே ஹோமியோபதி மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் பத்தியங்கள் இருந்தன என்றாலும் தற்போது பத்தியம் மிக மிகக் குறைவு. நாள் ஒன்றுக்கு 6 தடவை காபி குடிப்பவராக இருந்தால் இரண்டு தடவைக்கு மேல் குடிக்க வேண்டாம் என்றுதான் சொல்வோம்.
பக்க விளைவுகள் கிடையாது : இம் மருத்துவ முறையில் வேதியியல் பொருள்கள் கலக்காமல் மாத்திரைகள் தயாரிக்கப்படுவதால் நோயாளி களுக்கு எவ்விதப் பக்க விளைவுகளும் ஏற்பாடாது அலோபதி

ஆடி அமாவாசை : புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு





ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், மாதம் பட்சம், வாரம், நாள், நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும் போதோ, தனித்து வரும்போதோ ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அயனம் என்பது வருடத்தின் இரண்டு பகுதிகள். அதாவது, சூரியனின் பயணத்தை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்ட கால அளவு. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்தராயணம். சூரியன் உதிப்பது கிழக்கு பகுதி என்றாலும், சற்று வடக்கு பக்கம் நகர்ந்த நிலையில் சூர்யோதயம் நடக்கும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது.

வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். அந்த சுழற்சி முறைப்படி ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.

ஜோதிட சாஸ்திரத்தில் பல திதிகள் இருந்தாலும், சஷ்டி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, பவுர்ணமி, அமாவாசை போன்ற திதிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம், சிறப்பம்சம் நிறைந்ததாக கூறப்படும் திதி அமாவாசை. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது அமாவாசை திதியாகும். ஆண்டுக்கொரு முறை அவர்களது திதி

உங்கள் Computer-ல் உள்ள‍ HARD DISK -ஐ பாதுகாக்க‍ சில எளிய வழிமுறைகள்

உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக்கொண்டு இருக்கும்போது, ஏதாவது பிரச் சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk-ல் குப்பை உருவாகும். இதுபோல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்ய லாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவ ற்றை சரி செய்யலாம். இதனால் உங் கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள் ளும் நேரம் கிட்டதட்ட ஒருமணி நேரம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங் கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்துவரும் குட்டி விண்டோ வில் Tools என்ற Tab ஐ தெரிவு செய் யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்ய வும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண் டாவது option சேர்த்து click செய்தால் Check Diskக்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள் ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன் று.

சித்தர்கள் வகுத்த‍ உறுப்புக்களும் நோய்களும்!


சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்நோய் கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொ ன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்க ளின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிரு ப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டை யும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறு வது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்க ளின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு,

தேனீர் (Tea) அருந்துவது நமக்கு நன்மையா? தீமையா?


காஃபி மற்றும் தேநீர் பருகாதவர்கள் மிகவும் குறைவே. ஆனால் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர். ஒரு வேளை தேநீர் குடிக்க வில்லை என்றாலும் பைத்தியம் பிடிப்பது போல் ஆகிவிடுவர் பலர். சரி, தினமும் குடிக்கிறீர்களே, அதனை பற்றி எத்தனை பேருக்கு முழுவ துமாக தெரியும்? அதில் உள்ள மருத்துவ குணங்கள் எத்தனை பேருக்கு தெரியும்? நல்லது என்று தெரியாமலே, நாம் பல காரியம் செய்கி றோம் அல்லவா? அப்படி ஒன்று தான் இந்த தேநீர். ஆம், இதில் நமக்கு தெரியாத பல நன்மை கள் அடங் கியுள்ளது. தேநீரைப் பற்றிய நெடுங்கால ஆய்வு கள், அவற்றின் மருத்துவ குணங்களை ஒவ் வொன்றாக நமக்கு தெரிவி க்கின்றன. பழங்கால த்தில் இருந்தே தலைவலி முதல் மன அழுத்தம் வரை, பல பிரச்சனை களுக்கு சிறந்த நிவாரணி யாக விளங்கு கிறது தேநீர். அத்தகைய தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று கொடுக்கப் பட்டுள்ளன அதைப்படித்து தெரிந்து கொள்ளுங்கள்
எடை குறைவு 
க்ரீன் டீ-யில் உள்ள கேட்சின்ஸ் என்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் உடல் எடை குறைவுக்கு பெரிதும் உதவுகிறது. இது உடம்பில் உள்ள கலோரிகளை எரித்து கொழுப்பினை குறைப்பதால் (முக்கியமா க வயிற்று பகுதியில்), உடல் எடை குறை யும்.
பல் சொத்தையாவதை தடுக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்


காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோ ஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படு கின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் ஏ, சி, இ:
வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை உடலின் இயற் கையான நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்து , உட லுக்கு தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொ ய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில் உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம் பருப்பு சாப்பிட்டு வரலாம்.
ப்ரோபயாட்டிக்:
தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உட லின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும் என்சைமான, இம்யுனோ குளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோ பயாட் டிக் உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தொற்றை எதிர்த்து போராட உதவுகி றது.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறு உடலுக்கு நன்மை செய்யு ம் பாக்டீரியாக்களின்

Aug 1, 2013

ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடக்கிறது?: படங்கள் இணைப்பு

 இணைய உலகம் என்றும் பரபரப்பானது. சுறுசுறுப்பாக இயங்கும் இணைய உலகத்திற்கு 24 மணித்தியாலங்கள் நிச்சயம் போதாது.
 
அங்கு 60 செக்கனுக்குள் பல்லாயிரக் கணக்கான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அதேபோல் கோடிக்கணக்கான பாவனையாளர்கள் தங்கள் நேரத்தை அதில் செலவழிக்கின்றனர்.
 
பேஸ்புக் லைக்கள், டுவிட்கள், ஸ்கைப் அழைப்புகள், பிலிக்கர்கள் படங்கள், யுடியுப் காணொளிகள் என்பன இதில் அடங்கும்.
 
இதனை தெளிவாகக் காட்டும் பொருட்டு 'கிவ்மீ' என்ற நிறுவனம் 'இன்போகிராப்' ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
பிசி மெக், பிஸ்னஸ் இன்சைடர், டெய்லிமெய்ல், போமட் போன்ற பிரபல இணையத்தளங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இதனை 'கிவ்மீ' வெளியிட்டுள்ளது.
 
இதன் அடிப்படையில் நிமிடமொன்றில்
 
1. 216,000 படங்கள் இன்ஸ்ரகிராமில் பரிமாற்றப்படுகின்றன.
 
2. அமேசன் இணையத்தளத்தில் 83,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
 
3. பேஸ்புக்கில் 1.8 மில்லியன் 'லைக்ஸ்' போடப்படுகின்றது.
 
4. கூகுளில் 2 மில்லியன் தேடல்கள் இடம்பெறுகின்றன.
 
5. யுடியூப்பில் 72 மணித்தியாலங்கள் ஓடக்கூடிய காணொளிகள்.
 
6. 278,000  டுவிட்கள் பதிவு செய்யப்படுகின்றன.
 
7. புதிய இணைய முகவரிகள் 70 பதிவு செய்யப்படுவதுடன் 571 தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
 
8.  204 மில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது.
 
 

Jul 30, 2013

27 பிராந்தியங்கள் கடும் புயல் எச்சரிக்கையில்!!

இன்று வியாழக்கிழமை மாலை 16h00 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 7h00 மணி வரை பின்வரும் 27 பிராந்தியங்களில் கடும் புயல் மழை பெய்யலாம் என செஞ்சிவப்பு எச்சரிக்கை (Alerte Orange) விடப்பட்டுள்ளது. கடுமையான காற்று அல்லது மிகவும் கடுமையான மழையின் தாக்குதல் மோசமான விளைவுகளை உண்டுபண்ணலாம் என Météo France  எச்சரித்துள்ளது. 
 
 
 
 
முக்கியமாக இப்பகுதியிலுள்ள மக்களும் பொழுது போக்கு மற்றும் சிறுவர் விடுமுறை இல்லங்களும் (activités de loisirs) மிக அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்தச் சமயத்தில் தொலைபேசிகளையும் செல்பேசிகளையும் இலத்திரனியல் மற்றும் மின் உபகரணங்களையும் உபயோகிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
 
 
Ile-de-France இனை இப் புயல் மழை வியாழன் நள்ளிரவின் இரண்டாம் சாமத்திலும் வெள்ளிக்கிழமை அதிகாலையும் தாக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

வதிவிட உரிமை அட்டை - புதிய நடைமுறை


Seine-Saint-Denis (93) பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு பொபினி  Préfecture புதிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன் மூலம் அதிகாலையிலேயே வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 
* உங்களுக்குரிய 1 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 1 an)
* உங்களுக்குரிய 10 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 10 ans)
* 5 வருடங்கள் 1 வருட வதிவிட உரிமை பெற்று அதனை 10 வருட வதிவிட உரிமை அட்டையாக மாற்ற  (Passage en 10 ans)
* உங்கள் வதிவிடத் தகுதி நிலையை மாற்ற (Changement de statut)
* வேறு பிராந்யத்திலிருந்து 93ற்கு விலாசம் மாற்ற (Changement d'adresse - aute département)
* உங்கள் பெயர் மாற்ற (Modification du nom)
* தொலைந்த வதிவிட உரிமை அட்டைக்கு மாற்றீடு அட்டை பெற (Duplicata)
 
நீங்கள் Préfecture நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் www.seine-saint-denis.gouv.fr எனும் இணையத்தள முகவரியில் உங்களுக்குரிய பகுதியில் பதிவு செய்து  அதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்திலேயே நிரப்பி அனுப்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்திப்பிற்காகன நேரமும் (RDV) கொண்டு வரவேண்டிய ஆவணங்களின் விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
 
http://www.seine-saint-denis.gouv.fr/Demarches-administratives/Etrangers/Sejour/Ressortissants-d-un-pays-hors-Union-europeenne/Renouvellement-d-un-titre-de-sejour எனும் பகுதியில் உங்கள் வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
 
ஏனைய விடயங்களைப் பின்வரும் இணையத்தள முகவரியில் செய்து கொள்ள முடியும்
 
 
உங்கள் வதிவிட அட்டை முடிவதற்கு மூன்று மாதங்களிற்கு முதல் அனுப்பபடும் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும்.  
இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு உங்களுக்கான சந்திப்பு நேரமும்; வழங்கப்படுவதால் உங்கள் காத்திருப்பு நேரமும் மிச்சப்படுத்தப்டுகின்றது உங்கள் புதிய வதிவிட உரிமை அட்டை தயாரானவுடன் உங்களுக்கு அது குறுஞ் செய்தி மூலமும் அனுப்பி வைக்கப்படும் என  Préfecture de Bobigny தெரிவித்துள்ளது.
 
 
 

பிரான்ஸைச் சுற்றிப்பார்ப்போம் வாருங்கள் - பகுதி1 (காணொளி)

பிரான்ஸ் தேசம் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களாலும் அரண்மணைகளாலும் தன் வீரத்தினையும் சிறப்பு மிக்க வாழ்வையும் இன்றும் சான்றாகக் கொண்டு மிளிர்ந்து நிற்கும் ஒரு தேசமாகும். அழகு மிக்க இந்த நாடு தன் பண்டைய மற்றும் நவீனக் கட்டக் கலையாலும் இயற்கை அழகுகளாலும் உலக மக்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் காதல் தேசமாகப் பிரான்சும் அதன் கலாச்சாரமும் அனைவரையும் தன் பால் ஈர்த்துள்ளது. பரிஸ்ம் அதனை அண்மித்த புறநகர்ப் பிரதேசங்களும் பெருமளவான சுற்றுலாப் பயணிகளைத் தம் பால் வசீகரிக்கும் அழகும் வரலாறும் உடையவை.
 
 
 
அவற்றின்முக்கியமான பகுதிகள் சிலவற்றை உங்கள்கோடை விடுமுறைக்குக் கண்டுகளிக்க இலகுவாக நாம் இங்கே தருகின்றோம்.
 
இந்தச் சுற்றுலாவின் முதற்கட்டமாக விபரமாக நாம் பின்வபவற்றைச் சில நாட்களிற்குப் பார்ப்போம்.
 
1. ஈபிள் கோபுரம்.
2. லூவ்ர் அருங்காட்சியகமும் அதன் தோட்டங்களும் பிரமிட்டும்
3. Notre dame de Paris Njthyak; (Our Lady of Paris)
4. ஒப்பேராவும் அதன் சுற்றுப்புறமும்
5. இருதய நாதர் தேவாலயம் (White Church - sacre coeur de montmartre)
6. வேர்செய்ல் அரண்மணையும் தோட்டமும்
7. பொம்பிதூ சதுக்கம்
8. Tuilerie தோட்டம்
09. Arc De Triomphe (etoile)
10. pantheon
11. டிஸ்னி லாண்ட்
 

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...