Mar 31, 2014

ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சில ஊட்டச்சத்து குறிப்புகள்

 ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால் மட்டுமே மனத்தெளிவை பெற்று, நோய்கள் மற்றும் உடல் பலவீனத்தை தடுத்து, நோய்களில் இருந்து எளிதில் குணமடையும் சக்தியை பெற்று, அதிக ஆற்றல் திறனுடன் விளங்க முடியும். நல்ல உணவுமுறையால், உடலுக்கு நல்ல ஆற்றலும், உடம்பில் உள்ள நீண்ட கால நோய்களை சமாளிக்கும் திறனும் அவர்களுக்கு கிடைக்கும். வயதான காலத்தில் நல்ல உணவு முறையால், நல்ல மனநிலையையும், உணர்வுகளில் நிலைப்பாட்டையும் பெற முடியும். உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்து தேவைகள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.வயதான பிறகு கலோரிகளை எரிக்கும் திறன் நமது உடலுக்கு குறைந்து விடும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து விடும். தவறான உணவு முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் சிகரெட் பிடித்தல் போன்ற சில காரணங்களாலேயே பொதுவாக

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள்

 கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது

Mar 30, 2014

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ஒயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ஒயின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்சு மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ஒயினை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ஒயின் உடலுக்கு மட்டும் நன்மைகளை தருவதில்லை.

Mar 23, 2014

திருமதி மஞ்சுளா வசந்தராஜா 15.03.2014


திருமதி மஞ்சுளா வசந்தராஜா
மண்ணில் : 7 டிசெம்பர் 1965 — விண்ணில் : 15 மார்ச் 2014

யாழ். வேலணை வடக்கு சோளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மஞ்சுளா வசந்தராஜா அவர்கள் 15-03-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னலக்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்களம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வசந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத், கோபிதாசன், கல்பனா, கோபிசங்கர்(கெவின்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
சறோஜினிதேவி(சறோ), சதானந்தி(சதா), சித்திரா(கலா), ஜெயசீலன்(சுவிஸ்), சத்தியசீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வைரவநாதன், நந்தகுமார், விஜயகுமாரன், கிறிஸ்ரினா(சுவிஸ்), வினோதா(பிரான்ஸ்), பரிமளகாந்தி, லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா),

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...