Apr 24, 2012

முள்ளங்கியின் மகத்துவம்


முள்ளங்கியின் சில விஷேச தன்மைகளை இந்த பதில்வில் பார்ப்போம். யுனானி மருத்துவத்தின் அடிப்படையே நமது இரத்தம் சுத்தமாக இல்லாமைதான். அதில் உள்ள நச்சு பொருட்களை சரிவர நீக்காவிட்டால் தான் நோய் வருகிறது என்கிறது.

முள்ளங்கி நம் உடலில் உள்ள அசுத்த காற்றான கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றி பிராணவாயு ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அடங்கி உள்ள மூல கூறுகள் நிறைய நோய்களுக்கு மருந்தாகத் திகழ்கிறது.

முள்ளங்கியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும்
அதற்கு தேவையான வைட்டமின் “A” இதில் அதிக அளவில் உள்ளது.

சோடியம் மற்றும் குளோரின் இருப்பதால் மலச்சிக்கலை தூர விரட்டுகிறது. அஜீரண கோளாறுகளை குணப்படுத்துகிறது. வயிற்று எரிச்சல், புளியேப்பம் போன்ற தொந்தரவுகள் வராமல் காக்கின்றது.

தீப்புண்களின் மீது முள்ளங்கியை அரைத்து பற்று போட்டால் புண்ணின் காரணமாக ஏற்படும் எரிச்சல் மற்றும் காயத்தில் இருந்து வடியும் நீர் நின்று விடும்.

வெள்ளை முள்ளங்கி தோற்றத்தில் வெண்மையாக இருந்தாலும், இதனை சாப்பிடுபவருக்கு நல்ல நிறத்தை தர வல்லது. உடல் களைப்பைப் போக்கி நன்றாக தூக்கத்தை கொடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

உயிரணுக்கள் குறைவாக உள்ள ஆண்களுக்கு இது அருமருந்து. இதை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உயிர் சக்தி இழப்பை சரிகட்டலாம் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. முள்ளங்கி விதையை வெண்ணையுடன் கலந்து சாப்பிடுதல் என்பது ஆண்களுக்கு காயகல்பம் போன்று சக்தியை தரவல்லது.

இதில் கால்ஷியம், மாங்கனீஸ் கலந்துள்ளதால் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஆஸ்டோபோரஸ் என்ற எலும்பின் அடர்த்தி குறையாமல் காக்கும் தன்மை உடையது. மூட்டு வலி, எலும்பு சிதைவு போன்றவைகளும் குணமாகிறது. கந்தக சத்து இருப்பதால் சரும நோய் குணமாகும்.

இது குளிர்ச்சியான உணவாக இருந்தாலும் ஹோமியோபதியில் சொல்வது போல் ஒரு நோய்க்கு அந்த நோய் கிருமிதான் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும் எனபது போல், இது இருமல், நெஞ்சு சளி போன்ற நோய்களை விரட்டி அடிக்கிறது.

ஆயுர் வேதத்தில் இதனை கிட்னியின் (பூஸ் இன் கிட்னி இல்லை) கற்களைக் கரைக்க மருந்தாகப் பயன் படுத்துகிறார்கள். வயிற்றில் உள்ள புண் (அல்சர்) மற்றும் பூச்சிகள் இருந்தால் தினமும் முள்ளங்கி சாறு சாப்பிட்டு வந்தால் புண் விரைவில் குணமாகும், புழுக்கள் அழிந்துவிடும்.

காதினுள் உள்ள ”ஒலி வாங்கி” கருவிகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும் எனில் இரண்டு மூலக்கூறுகளின் தேவை மிக அவசியம். ஒன்று சிலிகான், மற்றொன்று அயோடின். இந்த இரண்டும் முள்ளங்கியின் தோல் பகுதியில் உள்ளது. இத்தோலை சீவி விடுவதால் இச் சத்துகள் வீணாக்கப்படுகின்றன. அதனால் முள்ளங்கியை நன்கு கழுவி தோலை நீக்காமல் பயன் படுத்த வேண்டும்.
முள்ளங்கியின் இலைகளை தேங்காய் எண்ணையில் போட்டு நன்கு காய்ச்சி மிதமான சூடாக அல்லது ஆறிய பின்பு காதில் சில சொட்டுக்கள் விட்டால் காது வலி குணமாகும். அடைப்பட்ட “யூஸ்டேஷியன் குழல்” திறந்துக் கொள்ளும். குழந்தைகளுக்கு சளிபிடித்து காது அடைப்பு இருந்தால் முள்ளங்கியின் விதை 5 கிராம் எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து வடிகட்டிய பின் காதில் நான்கு சொட்டுக்கள் விட காதுவலி சரியாகும்.

முள்ளங்கி சாற்றில் கற்கண்டு கலந்து குடித்து வந்தால், அடிகடி கருசிதைவு ஏற்படுபவர்களுக்கு பூரண நிவாரணம் கிடைக்கும். இது தவிர புத்திர பாக்கியதிற்கும் இது நல்ல மருந்து.

தண்ணீரில் முள்ளங்கிச் சாற்றை கலந்து குளித்து பாருங்கள் பேன், பொடுகுத் தொல்லை நீங்குவதை காண்பீர்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...