Apr 24, 2012

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”

            அறுகம்புல் இறந்தாலும் உயித்தொழும் தன்மை உடையது. அது விநாயகனுக்கு அர்ப்பணிக்கும் பொருளாகும். விக்கினம் தீர்ப்பவன் விநாயகன் விக்கினம் ஏற்பட காரணம் ஸ்திமான மனம் இல்லாமை இதனால் ஆய்ந்து அலசி ஆராய்யும் திறனை இழந்து தவிக்கின்றான் மனிதன் இதற்கு அடிப்படையான காரணம் உடல் சமநிலை இன்மை உடல் முக்குணங்களால் வழிநடாத்தப்படுகின்றது. அவை வாத, பித்த, கபம் என்பன இவற்றின் சமநிலை மாறுமானால் மனமும்  சமநிலையை இழக்கின்றது இதனால் விக்கினம் ஏற்படும் இதை அறுகம் புல் அவற்றுக்கிடையிலான ஏற்ற இறக்கத்தை சீர்செய்து
சமநிலைக்கு கொண்டு வரும் ஆற்றல் அறுகுக்கு உண்டு. சிவன் அகோரமானவர். அகோரக் காற்று வடிவானவர். பஞ்சபூதங்களில் கற்றுக் கூறு.  இது வாதத்தன்மையானது. புளிப்பு சுவையால் அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது. இதை சரி செய்ய வில்வம் பயன் படுத்தப்படுகின்றது. பொதுவாக உஸ்ன நோய்களுக்கு அருமருந்து வில்வம். விஸ்ணு குளிர்ச்சியானவர் அவருக்கு துளசி குளிர்சியால் உண்டாகும் நோய் கபம் இ;தைப்போக்க துளசியே அருமருந்து. இது பஞ்சபூதங்களில் நீர் கூறு. இது இனிப்புச் சுவையானது. அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது கபம்.  சக்தி நெருப்பு வடிவானவள். நெருப்பின் வெப்பத்தை குறைக்க வேம்பு. வெப்பத்தினால் பித்தம் உடலில் அதிகரிக்கும் பித்தத்துக்கு மருந்து வேம்பு. இது பஞ்சபூதங்களில் நெருப்புக் கூறு. அது கசப்புத் தன்மையானது. பஞ்சபூதங்களில் மனிதனின் உடலில் நோய் வரக் காரணமானதாக நீர்,நெருப்பு, காற்று என்னும் கூறுகள் ஆகும். இவற்றால் உடலில் ஏற்படுத்தப்பட்டவை வாதம், பித்தம், சிலேற்பனம் என்னும் கபம். இவை முறையே புளிப்பு, கசப்பு, இனிப்பு சுவைகளினால் ஏற்பட்டவை. இவைகள் அனைத்தும் சமமாக இருக்கின்ற போதே உடலில் நோய் இல்லாது  மனஅழுத்தமோ, படபடப்போ, தடுமாற்றமோ இன்றி உடல் சமநிலையில் இருக்கும். இதில் ஏற்றத்தாழ்வு இருக்குமானால் அங்குதான் நோய்க் குறிகள் ஆரம்பமாகின்றது.  இவர்கள் அனைவருக்கும் பொதுவானவர் விநாயகர் இவர் எல்லா இடத்திலும் இருப்பார் இவருக்கு அறுகு அது துவர்ப்பு சுவையானது. இது விநாயகரின் பிரதான அர்ச்சனைப் பொருள். இவர் எல்லா இடத்திலும் பொதுவாக இருப்பது போல் அறுகாகிய ஒற்றை மூகிலிகை வாத, பித்த, கபம் என்னும் மூன்றையும் சமநிலையில் பேணும் மூகிலியாக உள்ளது. “வாதபித்த மையமோடினை சிறு வருக்கும்” என தேரையர் முதல் வரியிலேயே எவ்வளவு அழகாகக் கூறிவிட்டார். 
அறுகம்புல்


அறுகம்புல்
             இந்து மதம் எவ்வாறு வழிபாட்டையும் வைத்தியத்தையும் இணைத்துள்ளது. இதனாலேயே அதற்கு ஆயுர் வேதம் என பெயர் வழங்கலாயிற்று. சைவம் ,வைணவம், சாத்தம் மூன்றும் மூன்று துருவங்களாக இருந்த காலமொன்று இருந்தது அப்போது காணபத்தியக் கடவுலான விநாயகனை எல்லோரும் பொதுவாக ஏற்றதுண்டு எல்லா ஆலயங்களிலும் அவருக்கு ஒரு  தனிச்சன்னதி வைத்திருப்பர்.மதம் என்ற மத வெறியை ஏற்படுத்திய வாத பித்த கபக் கூறுகனை சமப்படுத்த பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விநாயகர் அறுகு ஆகும். அறுசமயங்களை ஒன்றாக்கிய பெருமை ஆதி சங்கரக்கே அவரே சங்கரன்.
        தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில் அறுகம்புல்லின் மருத்துவ பாகம் பற்றி குறிப்பிடுகையில்
        “வாதபித்த மையமோடி ளை சிறுக வருக்கும்
             மின்னும் செப்பி லறிவு தரும் கண்நோய்
            யொடு தலை நோய் கண் புகையில் ரத்த பித்தம்
            முன்நோய் ஒழிக்கும் முறை” என்றார். இங்கு
1. “செப்பில் லறிவு தரும்”: நினைவாற்றலை அதிகரித்து சிந்தனா சத்தியை கூட்டி அறிலைப் பெருக்குகின்ற ஆற்றல் மிக்கது அறுகம்புல். இதனாலேயே “அருணகிரி நாதர்” விநாயகர் திருப்புகழில் “முத்தமிழ் அடைவிணை முப்படுகிரிதனில் முப்பட எழுதிய முதல்வோனே” அவ்வளவு ஆற்றல் உள்ளது அறுகம்புல். “விநாயகப் பெருமான் புத்தியின் வடிவானவன் அவன் முத்திக்கு வழிகாட்டுபவன் சித்தியில் உறைபவன்” அதனாலேயே அவனுக்கு புத்தி சித்தி என்னும் இரு மனைவியர். சிந்திக்கும் ஆற்றலுக்கு அவசியமான சத்தியவை. புத்தி விளிப்படைந்து சித்தம் தெளிந்தால் அவன் செல்ல வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும் அதுவே அவனின் வெற்றிப்பாதை அங்கு தோல்விக்கு இடமில்லை அதுவே விக்கினம் தீர்க்கும் பணி. அப்படிப்பட்டது தன்மைகளை தரவல்லது அறுகம் புல்.
2. கண்நோய் யொடு தலை நோய் கண் புகையில்”: கண்பார்வை மங்கலாக இருத்தல் இன்நிலையில் கண்களில் புரை வளரத் தொடங்குவதை கட்டுகின்றது இதனால் கண்பார்வை மங்கலாகிக் குறைந்து வரும் இது இரத்தழுத்தத்தால் ஏற்படலாம். தலைவலியும் ஏற்படும் இதனைப் போக்குகின்ற திறன் அறுகம் புல் எண்ணைக்கு உண்டு.
3. “ரத்தபித்தம்” : என்பது குருதியில் பித்தம் கூடுதல் அதாவது குருதியில் அனல் கூறாக இருக்கின்ற வெப்பக் கூறு கூடுகின்ற போது குருதியில் பித்தம் அதிகரித்து குருதியின் அழுத்தம் கூடும் இதை குருதி அளல் அல்லது குருதி அழுத்தம் என்பர். அதற்கு அடிப்படைக் காரணம் பரபரப்பு, மனஅமைதியின்மை, உடல் பருமன் அதிகரித்தல், கொழுப்புச் சத்து அதிகரித்து இரத்த குழாயிகளில் படிந்து இரத்தழுத்தம் ஏற்பட்டு  இருதயநோய் வருகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் இரத்தக்குழாய்கள் தமது இயல்பான தன்மையை இழந்து விடும். இயல்பாகவே இரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை உடையது. அறுகம்புல் இரத்தக்குழாயயை இளமையாக நிலைத்திருக்க வைத்திருப்பதுடன் சுருங்கி விரியும் தன்மையை இழக்காது பாதுகாக்கின்றது.
4. “முன்நோய் ஒழிக்கும் முறை”: நோய் வருவதற்கு முன்னர் நோயை வராது முன்னால் தடுக்கும் ஆற்றல் அறுகம் புல்லுக்குண்டு.
நவீன அறிவியல் கூறும் விந்தை:
     இரண்டாயிரத்து ஏழில் (2007 இல்) சுந்தர்சிங் என்ற ஆய்வாளர் செய்த ஆய்வில் அறுகம்புல் தண்ணீர்ச் சாறு இரத்தத்தில் சக்கரையின் அளவையும் கொழுப்பின் அளவையும் குறைத்து. இரத்தத்தை சீர் செய்யும் சக்தியும் வல்லமையும் உள்ளது. என்றும் அது குறைக்கும் அளவையும் அளவிட்டுக் குறிப்பிட்டுள்ளார். கொழுப்புப் பரிசேதனையில் மொத்தக் கொழுப்பு, ஆபத்தான மிருகக் கொழுப்பு, டைற்கிளிகரைட் இது போன்றவை உண்டு. இதனை பரிசாதனை செய்யும் முறையை “லிப்பிட் புறபையில் பரிசோதனை” என்பர். அறுகம்புல் சாற்றை அருந்திய பின் பரிசோதனை செய்த போது. மொத்த கொளஸ்லோல்(TC)- 33 வீதத்தாலும்(33% ), ஆபத்தான மிருகக் கொழுப்பு (LDL) – 77 வீதத்தாலும்(77%), டைற்கிளிகரைட் -29 வீதத்தாலும்(29%) குறைவடைந்து காணப்பட்டது என்று ஆய்வின் முடிவை வெளியிட்டிருந்தார். சித்தரின் வெண்பா எவ்வளவு உறுதியாக ஆணையிட்டுள்ளது. “கண்ணோய் யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம்” போன்ற நோய்க்கு அடிப்படை இரத்தபித்தமெனும் இரத்தழுத்தம் இதை போக் வல்லது அறுகம்புல்.
பயன் படுத்தும் முறைகள் :
1. அறுகம்புல் தைலம்: அறுகம்புல்லைத் தேர்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது ஓர் முக்கிய விடையமாகும். சரியான புல்லைத் தேர்தெடுக்கும் போது:
1.அறுகம்புல் பூக்கும் தன்மையுடையது.
2.கணுக்கள் விட்டு படர்ந்து கணுக்களுக்கிடையல் கிளை விட்டு          
    வலைப் பின்னல் போல விரிந்து படரும் தன்மையுடையது. இவ்வாறு              
தெரிவு செய்து கொள்ளவேண்டும். அறுகு போன்று வித்யாசப்படுத்த முடியாத புல்வகையும் உண்டு. அது பூக்காத ஒஸ்ரேலியன் கிராஸ், கொறியன் கிராஸ் போன்ற பூங்காக்களில் அழகுபடுத்தும் ஒருவகைப்புல்கள் உண்டு அவை பார்வைக்கு ஒன்று போல இருந்தாலும் அதன் தன்மை வேறு அது அறுகாகாது. இவ்வாறு தேர்ந்தெடுத்த அறுகம் புல் ஒருபிடி எடுத்து அதை நன்றாக உரலில் இட்டு இடித்தெடுத்து வைத்துக் கொண்டு. ஒரு அகன்ற கரண்டியில் நல்லெண்ணை விட்டு நெருப்பில் பிடித்து காச்சி அதனுள் இடித்தெடுத்து வைத்த அறுகம்புல்லை இட்டவும். இட்டவுடன் அது எண்ணெயினுள் சென்று மீண்டும் மேல் வரும். (எண்ணையில் அறுகை இடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் எண்ணையில் பச்சை புல்லை போடும் போது பொங்கும்) வந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட்டு எண்ணையை எடுத்து ஆறவிட்டு பின் அந்த எண்ணையை தலை, முகம் போன்ற வற்றில் தேய்த்து சில மணிநேரம் ஊறவிட்டு வெண்நீரில் தோய வேண்டும். வென்நீர் என்னும் போது நன்றாக சூடாகிய நீரில் குளிந்த நீரை கலத்தலை தவித்து சூடாக்கும் போது குளிப்பதற்கு தக்கதாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணையை உடலில்லிருந்து அகற்ற சவற்காரத்தைத் தவித்து சீயாக்காய்த்தூள், அரப்புத்து தூள், பாசிப்பயறுமா போன்றவற்றை பயன்படுத்தி எண்ணையை உடலில்லிருந்து அகற்ற வேண்டும். இவ்வெண்ணையைப் பயன்படுத்துவதினால் பினிசம், தலைவலி, மனவழுத்தம், பரபரப்பை ஏற்படுத்தும் தலைவலி என்பன குணமாகும்.
அறுகம்புல் பூ




2. அறுகம் புல்லை சாறாக்கி அருந்தலாம் இதனை அறுகம்புல் யூஸ் என்று அழைப்பர்.


3. அறுகம்புல்லுடன் (ஒருகைப்பிடி அளவு) இதனுடன் ஆறு மிளகும் நாலில்ஒரு பங்கு தேக்கரண்டி அளவு நற்சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு நன்றாக நீர் விட்டரைத்து காச்சி வடிகட்டி வெறுவயிற்றில் காலையில் ஒரு டம்பிளர் அருந்த வேண்டும். அருந்திய பின் இரண்டு மணித்தியாலங்களின் பின் மலக்கழிவு ஏற்படலாம் பயப்படத் தேவையில்லை.
4.நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இனலில் உலர்த்தி பொடி செய்து வஸ்திரத்தில் சலித்து வஸ்திரகாயமாக வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் இட்டு அல்லது தண்நீரில் போட்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டுவர “வாதபித்தம் ஐயமோடு இழை சிறு அறுக்கும் ---
5.சரும வியாதிக்கு அறுகம்புல் நல்ல மருந்தாகும். அறுகம்புல்லும் மஞ்சலும் சேர்த்து விழுது போல அரைத் தெடுக்கவேண்டும். (ஒருபிடி அறுகம்புல்லுக்கு ஒரு தேக்கரண்டி மஞ்சல் வீதம்; சேர்த்தல் வேண்டும்.) அரைத்தெடுத்த அறுகம்புல் குழம்பை நெற்றி, கன்னம், சைனஸ் நீர் தேங்கக்கூடிய இடத்திலெல்லாம் பூசித் தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டு இருந்து தோய வேண்டும் (நீராடுதல் வேண்டும்) பின்னர் உடலில் நீர் இன்றி நன்றாக துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சைனஸ்; வியாதியிலிருந்து விடுபடமுடியும். சரும வியாதியுள்ளவர்கள் வியாத்யுள்ள இடங்களில் இரவில் பூசி காலையில் நீராடமுடியும் சரும வியாதியிலிருந்து விடுபடமுடியும்.  
         ---  இன்னும் செப்பில் அறிவு தரும் கண்ணோய்
            யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம முன்நோய் யொழிக்கும் உரை” இங்கு சொல்லப்பட்ட தேரயர் வாக்கு பலிதமாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...