Apr 24, 2012

சங்கிலை

மருத்துவக் குணங்கள்:

    சங்கிலை மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் புதர் காடுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரை, கடற்கரைகளிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. பின் காங்கோ, சோமாலியாவில் பரவிற்று.  இது 8 மீட்டர் வரை வளர்ந்து படரக்கூடியது. இதன் இலைகள் பளபளப்பானவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். கூர்மையான நுனிகளையுடையது. இலை கோணங்களில் நீண்ட நான்கு முட்களையுடையது. முட்கள் 5 செ.மீ. நீளமுடையது. இதன் பழங்கள் மஞ்சளாக இருந்து பின் வெள்ளையாக மாறும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
    சங்கிலை சிறுநீர்ப் பெருக்கியாகவும்,
இலை உடல் பலம் பெருக்கியாகவும், வேர் கோழையகற்றும், இருமல் தணிக்கும், ஆஸ்துமா, சர்க்கரை வியாதி போக்கும் மருந்தாகவும் செயற்படும்.
    சங்கிலை, வேப்பிலை, சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.
    சங்கிலை, வேர்பட்டை சமனளவு அரைத்து சுண்டைக்காயளவு வெந்நீரில் காலை, மாலை கொள்ள 20 நாள்களில் ஆரம்பப் பாரிச வாதம் வாயு, குடைச்சல் பக்கவாதம் தீரும்.
    சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம், வலி, நீர்ஏற்றம் கீல் வாயு தீரும்.
    சங்கம் வேர்பட்டைச்சாறு 20 மி.லி. 100 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் குடித்து வர சிறுநீர்த் தடை நீங்கும்.
    வர அரிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை, நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய பின் ஒரு டம்ளர் காலை மாலை குடிக்க இருமல் குணமாகும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...