May 22, 2012

நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!--உபயோகமான தகவல்கள்

நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!

நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்பட்டது, சுமத்ராவில் ஏற்பட்டது என்றுதான் இத்தனை நாளும் செய்திதாள்களில் படித்து வந்தோம். இனி அப்படி இருக்க முடியாது. காரணம், தமிழகத்தின் சென்னை, கோவை பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளாகவும், மிதமான அபாயம் என்கிற 3-வது நிலை பட்டியலில் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
ந்த வகையில், தற்போது ஐந்து மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டி ருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகுதான், தற்போது பிளான் அப்ரூவலே தருகிறார்கள். ஐந்து மாடிகளுக்கு மேல்தான் என்றில்லை; பொதுவாகவே நாம் கட்டும் வீடுகள்
நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கக் கூடியவைகளாக அமைப்பதே நல்லது. நில அதிர்வுகளைத் தாங்கும் வீடுகளை எப்படி அமைப்பது..? என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் பிரிவின் டீன் எம்.சேகரிடம் கேட்டோம். அவர் கொடுத்த முக்கியமான சில டிப்ஸ்கள் இனி..!
முதலில் நாம் கவனமாக இருக்க வேண்டியது, எந்த சூழ்நிலையிலும் செங்கல், கம்பி, சிமென்ட் போன்றவற்றின் தரத்தில் விட்டுக் கொடுக்க கூடாது.
செங்கல் கட்டடம் எனில் நான்கு அடி உயரத்துக்கு ஒரு சுற்று என்ற வகையில், ஒரு மாடி கட்டடத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு சுற்றாவது கான்க்ரீட் பெல்ட் அமைக்க வேண்டும்.

கார் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்படும் கீழ்த்தளத்தை லேசான தூண்களோடு இப்போது நிறுத்திவிடுகிறார்கள். அது தவறு. சுவர் அமைக் காதபட்சத்தில் தூண்களின் பருமனையாவது அதிகப் படுத்துவது அவசியம். அல்லது பருமன் அதிகமுள்ள கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். நிலநடுக்க அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டப்படும் கட்டடம், சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். ஸ்டைலுக்காக கிராஸ் டிசைன் செய்யக் கூடாது.
கான்க்ரீட் கட்டடங்களில் தூண்களும் உத்திரமும் சேருமிடத்தில், அவற்றில் பிணையப்படும் 'ரிங்’ எனப்படும் கம்பி வளையங்கள் வழக்கத்தைவிட நெருக்கமாக இருக்க வேண்டும். உதாரணமாக 5 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்படுகிறது எனில், குறிப்பிட்ட ஜாயின்ட்களில் 4 அங்குலத்துக்கு ஒரு 'ரிங்’ பொருத்தப்பட வேண்டும்.
20, 25 அடுக்குகள் என மிக உயரமான கட்டடங்களில் தூண்களுக்கும் உத்திரங்களுக் கும் இடைப்பட்ட பகுதியை செங்கல்லை கொண்டு மட்டும்  சுவர் அமைக்காமல், இடையிடையே கான்க்ரீட் சுவர் அமைக்க வேண்டும். அது மட்டுமல்ல, கட்டடத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதி வரைக்கும் ஷியர்வால் (sலீமீணீக்ஷீஷ்ணீறீறீ) எனப்படும் கான்க்ரீட் சுவரை அமைக்க வேண்டும். லிஃப்ட் அமைக்கப்படும் இடத்தில் லிஃப்ட்டைச் சுற்றிலும் ஷியர்வால் அமைக்கலாம். நிலநடுக்க அதிர்வின் விசை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இருக்கும் என்பதால், அந்த விசையை இத்தகைய ஷியர்வால் சமன்படுத்தி கட்டடம் விரிசல் விழாமல் தடுக்கும்.
நிலநடுக்க அபாயப் பகுதிகளில் கருங்கல்லை வைத்து கட்டடங்கள் கட்டக் கூடாது. இது செங்கல்லைவிட பல மடங்கு ஆபத்தானது.
ஐந்து மாடி, பத்து மாடி என மிக உயரமான கட்டடங்களில் 'டேம்பர்’ (பீணீனீஜீமீக்ஷீ) அமைப்பது பாதுகாப்பை அதிகப்படுத்தும். 'டேம்பர்’ என்பது ஷாக் அப்ஸர்வர் ஸ்பிரிங் போன்று நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இதனை உத்திரங்களின் எதிரெதிர் முனைகளுக்கு இடையே பொருத்துகிறபோது நிலநடுக்க அதிர்வின் விசைகளை பிரித்துக் கொடுத்து கட்டடத்தைக் காப்பாற்றித் தருகிறது.
ஏற்கெனவே கட்டி முடிக்கப் பட்ட பழைய கட்டடம் என்றாலும், நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் மாற்றி அமைக்கலாம். இரண்டு சுவர்கள் இணையும் முனைப்பகுதிகளில் ஸ்டீல் பிளேட் அல்லது கம்பி சல்லடை (நீலீவீநீளீமீஸீ னீமீsலீ) பொருத்தி வலிமையை அதிகரிக்கலாம். சுவரின் சில பகுதிகளில் துளைகள் இட்டு இரும்புக் கம்பிகளை பொருத்துவதன் மூலமும் ஓரளவுக்கு பாதுகாப்பைப் பெற முடியும்.
ஜன்னல் மற்றும் கதவு களுக்காக பெரிய திறப்பு வைக்கக் கூடாது. இது சுவர்களின் வலிமையைக் குறைத்துவிடும்.
தூண்களும், உத்திரங்களும் சேருமிடத்தில் கம்பிகளின் இணைப்பு மிகத் துல்லியமாக வளைத்து விடப்பட்டு பொருத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...