Sep 17, 2012

சீனாவில் தொடர்கிறது ஜப்பானுக்கு எதிராக மக்கள் போராட்டம்



பீஜிங் : சீனாவில் ஜப்பானுக்கு எதிரான மக்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை நிறுத்தி, அமைதி காக்குமாறு சீன அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடைப்பட்ட கிழக்கு சீன கடலில் ஒரு
குட்டி தீவு உள்ளது. மக்கள் யாரும் வசிக்காத அந்த தீவை சீன நாட்டினர் டயாயு என்றும், ஜப்பானியர்கள் சென்காகு என்றும் அழைக்கின்றனர். அந்த தீவை தங்களுக்கே சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

சீனா கடந்த வெள்ளிக்கிழமையன்று 6 கண்காணிப்பு கப்பல்களை அந்த தீவுக்கு அனுப்பி அப்பகுதியில் சுற்றிக்கொண்டு இருந்த ஜப்பான் கடலோர காவல் கப்பலை அங்கிருந்து வெளியேற்றியது. இந்நிலையில், ஜப்பானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவில் ஷாங்காய், குவாங்ஜு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஜப்பான் நாட்டு தூதரகம் முன்பு மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதிகளில் சேதம் எதுவும் ஏற்படாத வண்ணம் சீன அரசு அதிரடிப் படையினரை குவித்திருந்தது. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். சீனாவில் உள்ள ஜப்பானியர்களுக்கு ஆபத்து எதுவும் வந்து விடக் கூடாது என்பதற்காக தூதரகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு சீனாவை ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, மக்கள் அமைதி காக்க வேண்டுமென சீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...