Sep 17, 2012

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் அம்மணி காரக் கொழுக்கட்டை


என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 1 கப்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
வறுத்துப் பொடிக்க :
காய்ந்த மிளகாய் - 3,
கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு,
தனியா - தலா 1 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
கடுகு, உளுந்து - தாளிக்க,
நெய் மற்றும் எண்ணெய் - சிறிது.




எப்படிச் செய்வது?
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். கலவை, தோசை மாவு பதத்துக்கு இருக்கட்டும். வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை நெய்யில் வறுத்துப் பொடிக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள் தூள் சேர்த்துப் பிரட்டி, அரைத்த மாவை அதில் கொட்டிக் கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும்வரை கிளறி, இறக்கவும். ஆற விட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வேக வைத்து, எடுத்து, ஒரு பாத்திரத்தில் கொட்டி, வறுத்தரைத்த பொடியையும்,
தேங்காய்த் துருவலையும் சேர்த்துப் பிரட்டிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...