Oct 20, 2012

நித்தியானந்தாவால் சரியும் 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம்!

நித்தியானந்தாவால் சரியும் 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம்!
[Saturday, 2012-10-20
News Service 1,500 ஆண்டு கால பாரம்பரியமிக்க மதுரை ஆதீன சாம்ராஜ்ஜியம் சரிகிறது. நித்யானந்தா புகுந்ததை தொடர்ந்து சீரழிவு உருவானது என்று பக்தர்கள் வேதனைபட்டனர். நித்யானந்தா கடந்த ஏப்ரலில், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதும் எதிர்ப்பு கிளம்பியது.
  
இந்த பிரச்னை 3 மாதம் கிடப்பில் கிடந்தது. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்ததும் விவகாரம் பூகம்பமாக வெடித்து
சிதறியுள்ளது. இதில் தமிழக அரசு சார்பில் நித்யானந்தா நியமனம் சட்ட விரோதமானது. அவர் எந்த மடத்திற்கும் தலைமை ஏற்க அருகதை இல்லாதவர் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆதீனம் சார்பில், சட்ட விரோதமாக நியமிக்கவில்லை, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று பதிலளிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசின் அறநிலைய துறை ஆணையாளர் தனபால் மதுரை நீதிமன்றத்தில் திடீரென்று மனு தாக்கல் செய்து, ஆதீன சொத்துகள் 1995, 1999,ல் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் ஆதீனமாக நீடிக்க தகுதியற்றவர். மடத்தை அரசிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என கோரி உள்ளார். இதை எதிர்த்து ஆதீனம் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் தெற்கு ஆவணி மூலவீதியிலுள்ள மடத்தை அரசு ஏற்க அதிகாரிகள் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர். 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக புகழுடன் மரபுகள் காக்கப்பட்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க மதுரை ஆதீன மடாலய சாம்ராஜ்ய சகாப்தம் சரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
1980,ல் 292,வது ஆதீனமான அருணகிரிநாதர் 32 ஆண்டுகளாக அந்த பதவியில் உள்ளார். 2004,ல் தனது வாரிசாக சுவாமிநாதன் என்ற 16 வயது சிறுவனை நியமித்து சிறிது காலத்தில் நீக்கி வெளியேற்றினார். இப்போது தனது பதவிக்கே ஆபத்து நேர்ந்துள்ளது கண்டு அச்சத்தில் உள்ளார். ஆதீனத்தில் நித்யானந்தா புகுந்ததால் தான் இந்த சீரரூழிவும் களங்கமும் ஏற்பட்டுள்ளது என பக்தர்கள் குமுறுகின்றனர்.
ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சொத்துக்களின் உத்தேச மதிப்பீடு ரூ.1000 கோடிக்கு மேல் என்கின்றனர். இம் மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்புறம்பியம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி திருக்கோவில், பண்ணத்தெரு பண்ணகா பரமேஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே தெற்கு ஆவணி மூலவீதியில் அமைந்துள்ள ஆதீனமடத்தில் பல கோடி மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்கள் உள்ளன. மடத்தை சுற்றிலுமுள்ள கட்டிடங்களில் ஏராளமான நகைக்கடைகள் அமைந்துள்ளன. திருச்செந்தூரில் பங்களா உள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 550 ஏக்கர் நிலம் இருப்பதாக ஆதீனமே நேரில் பார்த்து கணக்கிட்டுள்ளார். இந்த சொத்துக்களில் இருந்து குத்தகை மற்றும் கட்டிடங்களில் இருந்து பகடி, வாடகை கோடி கோடியாக வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நித்யானந்தா அந்த பகடி, வாடகையை உயர்த்தி உள்ளார். இது தவிர கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க குவியல் உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...