Oct 20, 2012

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை!
[Saturday, 2012-10-20
News Service மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினார். மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்து தற்போதைய தலைமை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
  
இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் வாதிட்ட அரசு தலைமை
வழக்குரைஞர் ஏ.நவநீதகிருஷ்ணன்,
தற்போதைய தலைமை சன்னிதானம் அருணகிரிநாதரை மதுரை ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அவர் நீக்கப்பட்டால், மதுரை ஆதீன மடத்தின் நிர்வாகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஆகவே, மதுரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்புக்கு நித்யானந்தாவால் எப்போதும் வர இயலாது என்று வாதிட்டார்.
மதுரை ஆதீனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இது சரியான நடைமுறை அல்ல. ஆகவே, மதுரையில் தொடரப்பட்ட சிவில் வழக்கைத் திரும்பப் பெறுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளின் விசாரணையை முடித்துவைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர். சந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் தொடரப்பட்டுள்ள வழக்கையும் சேர்த்து உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று வாதாடினார். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...