Oct 20, 2012

உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க மாட்டேன்! - நித்தியானந்தா
[Saturday, 2012-10-20
News Service இளைய மடாதிபதி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் கோபமடைந்துள்ள நித்யானந்தா, உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை ஆசிரமத்தில் நிருபர்களுக்கு நித்யானந்தா அளித்த பேட்டி:
  
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கியதும், போலீசில் புகார் செய்திருப்பதும் இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. அதனால் எனக்கு அதிர்ச்சியில்லை. நானே ராஜினாமா செய்கிறேன் என ஆதீனத்திடம் வாக்குறுதி அளித்திருந்தேன்.
நல்ல நாள் பார்த்து ராஜினாமா செய்யலாம் என காத்திருந்தேன். அதற்குள் அவரே என்னை நீக்கி விட்டார். அதற்கு என்ன காரணம் என
எனக்கு தெரியவில்லை. என்னாலும், என் சீடர்களாலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாது. அவரை என்னுடைய தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன். அவருக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன். என்னை நீக்கும் அளவுக்கு அவருக்கு என்ன நெருக்கடி என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு நித்யானந்தா கூறினார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
அருணகிரிநாதர் கொடுத்துள்ள புகார் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்?
அப்படி எதுவும் நடக்காது, இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.
இளைய ஆதீனமாக இருந்த காலத்தில் ஏதேனும் உங்களுக்கு பொருள் இழப்பு ஏற்பட்டதா?
நான் சிறு சிறு சேவைகளை செய்தேன். உண்டியலில் போட்டதை திரும்ப கேட்க முடியுமா? மதுரை ஆதீனத்தில் உள்ள என்னுடைய பொருட்கள் எதையும் திரும்ப எடுத்துவர மாட்டேன். என் சீடர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. அவர்களாகவே திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...