Oct 27, 2012

பென்சன் எடுத்து வெளிநாடு செல்வோர் தொகை 46.000 ஆக அதிகரிப்பு

October 27, 2012
டென்மார்க்கில் பென்சன் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு போய் வாழ்வோர் தொகை என்றுமில்லாதளவு அதிகரித்துவிட்டதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.
இதுவரை சுமார் 46.000 பேர் டேனிஸ் பென்சனில் வேறு நாடுகளில் இருந்து வண்டியோட்டி வருகிறார்கள், இதனால் அரசுக்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் குறோணர்கள் செலவு ஏற்பட்டுவருகிறது.
கடந்த 2001 ம் ஆண்டு 775 மில்லியன் குறோணராக இருந்த தொகை இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாயுள்ளது.
இவ்வளவு பெருந்தொகை பணம் டென்மார்க்கில் இருந்து வெளியேறுவது
பொருளாதார கணக்கில் பாரிய தாக்கமுடையாதாக இருக்கும் என்பது தெரிந்ததே.
மேலும் 2001 ம் ஆண்டு வெளிநாடு சென்று பென்சனை எடுத்து வாழ்ந்தவர் தொகை 21.000 ஆக இருந்தது இப்போதோ 46.000 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போதைய நிலையில் அதிகமானவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகளிலும் வேலை செய்வதால் இந்தத் தொகை வருங்காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிப்புக்கள் கூறுகின்றன.
மேலும் டென்மார்க் உட்பட ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உழைக்காமல் வாழ்வோர் தொகை வகைதொகையின்றி பெருகுவதால் இந்தச் சிக்கல் எதிர்காலத்தில் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தைப் பெற வாய்ப்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
பென்சன் எடுத்துக் கொண்டு டென்மார்க்கைவிட்டு போவோர் குடியேறும் முன்னணி நாடுகளாக இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், ஸ்பானியா, ஜேர்மனி போன்ற நாடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது.
இவர்கள் டென்மார்க்கில் ஓய்வூதியம் பெற்று அதை இன்னொரு நாட்டில் செலவு செய்வது ஏன் என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
வயோதிபர்கள் அதிகரிப்பதும், உழைக்கும் வர்க்கம் குறைவதும் டென்மார்க் தொழிற்துறை வாழ்வில் பாரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
கடினமான வேலைகளுக்கு கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஊழியர்களை இறக்க வேண்டிய தேவையும் இதனால் அதிகரிப்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...