Oct 27, 2012

லாபம் தரும் சந்தன மரம் வளர்ப்பு




                                                முன்பெல்லாம் சந்தன மரங்களை அடர்ந்த வனங்களில் மட்டுமே காண முடியும். தற்போது அமல்படுத்தப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின்படி எந்த ஒரு தனி மனிதனும் சந்தன மரம் பயிரிடலாம் என்பதே நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் அகும். ஆம், விவசாய நிலம் வைத்திருக்கும் எந்த ஒரு தனி மனிதனும் தன்னிடம் உள்ள நிலத் தொடர்பான சிட்டா, அடங்கல், மற்றும் கணக்கெடுப்பு எண்ணைக் கொண்டு தனது கிராம நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்து கொண்டு இதனை விதைகள் அல்லது கன்றுகள் மூலம் பயிரிடலாம்.
                                         
                                           சந்தன மரங்களின் மகத்துவத்தை அறியாதவர் எவரும் இல்லை எனிலும் அதனைப் பற்றிய சில தகவல்கள்:
                                             சந்தன மரம் மிகச் சிறந்த வாசனைப் பொருள் மற்றுமல்லாமல், மருத்துவ குணமும் கொண்ட மரம். சந்தனமானது மருந்துகள்,  வாசனை திறவியங்கள், சோப்பு மற்றும் பல பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
                                         
                                           தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் சந்தன மரம் பயிரிடுதல் விதிமுறைகள் வழங்குகிறது. மேலும், பல அரசு மற்றும் தனியார் வங்கிகள் சந்தனம் பயிரிட கடன் வசதி செய்து தருகிறது.
                                       
                            மேலும், ஒரு மரக் கன்றினனை சுமார் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் நாம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பயிரிடுதல் மூலம் இரண்டு லட்சத்திலிருந்து அதிக பட்சமாக மூன்று கோடி வரை லாபம் பெறலாம் என்பது ருசிகரத் தகவல் ஆகும்.  தங்கள் பகுதி விவசாய துறையினரிடமும், விவசாய கல்லூரியிலும் விரிவான தகவல்கள் பெறலாம்.
                                     

         எனவே நண்பர்களே! சந்தன மரம் வளர்ப்போம்- பணம் பெறுவோம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...