Oct 27, 2012

பிறந்த நாள் கொண்டாடிய அசின், அமலாபால்

October 27, 2012
நடிகைகள் அசின், அமலாபால் 26.10.2012 அன்று ‘கேக்’ வெட்டி தங்கள் பிறந்த நாளை கொண்டாடினர். இருவருக்கும் ஒரே பிறந்த தேதியாகும். நடிகர், நடிகைகள் பலர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அசின் இந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். இவ்வருடம் போல் பச்சன் ஹவுஸ் புல் படங்கள் அவரை மேலும் பிரபலப்படுத்தின. அசின்
நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி வருகின்றன இதனால் இந்தியில் முன்னணி நடிகைக்கான இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது ‘கிலாடி 786’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பரில் ரிலீசாக உள்ளது. அமலாபாலுக்கு 21 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். அமலாபாலை தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, படங்கள் ஹிட்டாகி முன்னணி நடிகையாக்கியது. தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...